Tag Archives: சென்னிமலை
அருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில், மாரியப்பா நகர், சென்னிமலை
அருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில், மாரியப்பா நகர், சென்னிமலை, ஈரோடு மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆஞ்சநேயர் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | மாரியப்பா நகர், சென்னிமலை | |
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
அசோகவனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாப்பிராட்டியைத் தேடி அனுமன் செல்லும் வழியில், சென்னிமலையில் இறங்கியதாக சொல்லப்படுவதுண்டு. ஆஞ்சநேயர் தங்கிய இடம் பிற்காலத்தில் ஒரு பாறையாக வளர்ந்து உள்ளது. அப்படிப் பாறையாக உள்ள இடத்தில்தான் செல்வ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள மக்கள் ஆஞ்சநேயர் சிலையை குன்றின் மேல் வைத்து வழிபடத் தொடங்கினார்கள். இங்குள்ள ஐம்பொன்னாலான மூலவர் ஆஞ்சநேயர் சிலைக்கு அற்புத சக்தி இருப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள். வாயு மகன் ஆஞ்சநேயருக்கு நாடெங்கும் பல கோயில்கள் உள்ளது. அங்கு எல்லாம் ஆஞ்சநேயருக்கு பிரம்மாண்ட அளவில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்படுகிறது. அவைகள் அனைத்தும் கற்சிலைகள்தான். ஆனால் செல்வ ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள சிலை (மூலவர்) ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்தரை அடிஉயரத்தில் 650 கிலோ எடையில் இந்த ஐம்பொன் சிலையை அமைத்துள்ளார்கள்.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில், சென்னிமலை
அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில், சென்னிமலை, ஈரோடு மாவட்டம்.
+91-4294 – 250223 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுப்ரமணியசுவாமி (தண்டாயுதபாணி) | |
அம்மன் | – | அமிர்த வல்லி, சுந்தர வல்லி | |
தலவிருட்சம் | – | புளியமரம் | |
தீர்த்தம் | – | மாமாங்கம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப்பெயர் | – | புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி | |
ஊர் | – | சென்னிமலை | |
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு, தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடன் இருக்க இடுப்புக்கு கீழ் பாதம் வரை கரடுமுரடாக இருக்க அதை உளி கொண்டு செதுக்க முயன்றார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு எல்லோரும் பயந்து போய் வேலையை நிறுத்தி விட்டு, அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலை இடுப்புக்கு கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். தவிர ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யுத்தம் ஏற்பட்டபோது ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் சென்னி மலை என்று கூறுகின்றனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில், மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது. இது ஒர் மலைக்கோயில் இதன் உயரம் 1740 அடி, படிகள் 1320. மலை 1700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதிசயத்திலும் அதிசயமாக இரட்டை மாட்டு வண்டி 1320 திருப்படிகள் வழியே தங்கு தடையின்றி ஏராளமான செங்குத்தான வளைவுகள் உள்ள பாதை வழியே மலையேறிய அதிசயம் நடந்தது. மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சனத் தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.