Tag Archives: கம்பம்
அருள்மிகு கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் திருக்கோயில், கம்பம்
அருள்மிகு கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் திருக்கோயில், கம்பம், தேனி மாவட்டம்.
+91-94864 69990, 93612 22888
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் | |
தாயார் | – | அலமேலுமங்கை, காசிவிசாலாட்சி | |
தல விருட்சம் | – | வன்னி | |
தீர்த்தம் | – | சுரபி | |
ஆகமம் | – | பாஞ்சராத்ரம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கம்பம் | |
மாவட்டம் | – | தேனி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இப்பகுதியை ஆண்ட சிற்றரசருக்கு, சிவனுக்கும், பெருமாளுக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. அவரது கனவில் தோன்றிய பெருமாள், மேற்கு மலைத்தொடர்ச்சியின் அடிவாரத்தில் ஒரு கல் கம்பம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அவ்விடத்தில் தனது சிலை வடிவம் இருப்பதை உணர்த்தினார். அதன்படி மன்னர் சிலையை எடுத்து வந்து, இங்கு பிரதிஷ்டை செய்தார். கம்பம் அருகில் கிடைத்தவர் என்பதால் சுவாமிக்கு, “கம்பராயப் பெருமாள்” என்ற திருநாமம் சூட்டினார். அந்த ஊருக்கும், “கம்பம்” என்றே பெயர் வைத்தார். பின்னர் காசியிலிருந்து iலிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து, இருவருக்கும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் செய்வித்தார். இங்குள்ள தல விருட்சம் வன்னி. இந்த மரத்தை பிரம்மாவாக கருதுகின்றனர். ஆக, மும்மூர்த்திகளையும் வணங்க ஏற்ற தலம் இது.
திருமங்கை நாட்டை ஆண்ட நீலன் என்னும் மன்னன், தினமும் 1008 பெருமாள் அடியார்களுக்கு அன்னமிட்டு உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த செல்வம் குறைந்து, அப்பணியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் கலங்காத அவர் ஒருகட்டத்தில் திருடி அடியார்களுக்கு அன்னமிடும் சேவையைத் தொடர்ந்தார். அவரது பக்தியை வெளிப்படுத்துவதற்காக பெருமாள், திருமணக்கோலத்தில் சென்று எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். அதன்பின் அவர் ஆழ்வார்களில் ஒருவராகி, “திருமங்கையாழ்வார்” என்று பெயர்பெற்றார். திருமங்கை ஆழ்வாரின் பக்தியையும், அவரது வாழ்க்கையையும் சிறப்பிக்கும் விதமாக, இக்கோயிலில் ஆனி மாதம் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், “திருமங்கையாழ்வார் திருடிய வைபவம்” நடத்துகின்றனர். அன்று திருமங்கையாழ்வார் திருடுவது போல பாவனை செய்து, காவலர்கள் அவரை பிடித்துச் சென்று சுவாமி முன்பு நிறுத்துகின்றனர். அவ்வேளையில் அவர் திருடிய பொருட்களின் பட்டியல் வாசிக்கப்படும், இதை “பட்டோலை வாசித்தல்” என்பர். அதன்பின் பெருமாள் திருமங்கையாழ்வாருக்கு காட்சி தருவார்.
அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், கம்பம்
அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், கம்பம் – 625 516. தேனி மாவட்டம்.
**************************************************************************************
+91- 99441 16258, 97893 42921.
காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
தல விருட்சம்: – வேம்பு
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – கம்பம்
மாநிலம்: – தமிழ்நாடு
ஒருசமயம் இப்பகுதியில் மக்களுக்கு கொடிய நோய்கள் உண்டாகவே, மக்கள் அல்லலுற்றனர். அவ்வேளையில் பெண் ஒருத்தி கம்பத்துக்கு வந்தாள். தற்போது கோயில் இருக்கும் இடத்தில் அமர்ந்து கொண்ட அவள், நோயாளிகளை அழைத்து வேப்பிலையையும், மஞ்சளையும் கொடுத்தாள். அதனால் பலருக்கும் நோய் குணமாகியது. வியந்த மக்கள் அவளிடம், “எங்களுக்கு வைத்தியம் பார்க்கும் நீ யார்?” எனக்கேட்டனர்.
அவள் உடனே அம்பிகையாக சுயரூபம் காட்டினாள். பக்தர்களின் வேண்டுதலுக்காக இங்கேயே சுயம்பு வடிவில் எழுந்தருளினாள். பின்பு, சுயம்புவை சுற்றிக் கோயில் எழுப்பப்பட்டது.
பிற்காலத்தில் சுயம்பு அம்பிகைக்கு பின்புறம், மாரியம்மன் சிலை வடித்துப் பிரதிட்டை செய்து, கோயில் எழுப்பினர்.
பிரகாரத்தில் நாகர், அனுக்ஞை விநாயகர், பாலமுருகன், நவக்கிரக சன்னதிகள் இருக்கிறது.