Tag Archives: சேண்பாக்கம்

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், சேண்பாக்கம்

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், சேண்பாக்கம்– 632008 , வேலூர் மாவட்டம்

+91-416 – 229 0182, 94434 19001 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – செல்வ விநாயகர்

தல விருட்சம்: – வன்னிமரம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: – சுயம்பாக்கம்

ஊர்: – சேண்பாக்கம்

மாவட்டம்: – வேலூர்

மாநிலம்: – தமிழ்நாடு

மராட்டிய அமைச்சரான துக்காஜி தனது தேரில் இவ்வழியாக வந்து கொண்டிருந்தபோது ஓரிடத்தில் சக்கரத்தின் அச்சு முறியவே கீழே இறங்கிப் பார்த்தார். சக்கரத்தின் கீழிருந்து ரத்தம் கொப்புளித்தது. பயந்து போன துக்காஜியிடம் விநாயகரின் அசரீரி தோன்றி, “இவ்விடத்தில் ஏகாதச (11) வடிவில் நான் இருக்கிறேன். என்னை வெளிக்கொண்டு வா,” என்றது. அதன்படி துக்காஜி லிங்க வடிவில் இருந்த 11 விநாயகர்களையும் எடுத்து நிறுவனம் செய்தார். மூலவரான செல்வ விநாயகரின் முதுகின் வலது பக்கத்தில் தேர் சக்கரம் ஏறிய வடு இன்னமும் உள்ளது.

இங்கு விநாயகர் 11 சுயம்பு மூர்த்திகளாக அருள்பொழிகிறார் .

செண்பகவனத்து செல்வ கணபதி

யாரும் எக்காரியத்தையும் ஆனைமுகத்தோனைத் தொழாது செய்யத் துடங்குவதில்லை. அவர் ஓங்கரத் தத்துவத்தின் மூலாதாரம். எளிமையானர்; விண்ணோர்கள் முதலாய் அனைவராலும் வணங்கப் படுபவர்.வேலூரிலிருந்து பெங்களூர் சாலையில் 3 கல் தொலைவில் உள்ள சேண்பாக்கம் தான் செண்பக வனம்.

பண்டைய காலத்தே செண்பக வனமாய் இருந்த இவ்விடம், தற்பொழுது சேண்பாக்கமாக மருவி இருக்கலாம். சுயம்புவாகக் கணபதி உள்ள இடம் என்பதால் “ஸ்வயம்பாக்கம்” என ஆதி சங்கரர் பெயரிட்டார்; அது பின்னர் சேண்பாக்கமாக மருவியிருக்கலாம் என்பது மறு சாரார் கருதுகோள்.

இங்கும் சுயம்பு இலிங்கமாகக் கணபதி அமர்ந்து அருள் மழை பொழிகிறார். இங்குள்ள மற்ற 10 கணபதிகளும் சுயம்பு இலிங்கங்களாகவே காட்சியளிக்கின்றனர். அதில் ஒருவர் தரை மட்டத்தில் உள்ளார். அது மண் தத்துவத்தை நினைவூட்டுவதாயுள்ளது. இப்பதினொரு சுயம்பு இலிங்கங்களும் “ஓம்” என்னும் அமைப்பில் உள்ளதுதான் விதப்பு(சிறப்பு). தல விருட்சம் வன்னி மரம்.