Tag Archives: கீழ்படப்பை
வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கீழ்படப்பை
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கீழ்படப்பை, காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 98418 81884
காலை 7 மணி முதல் 10மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வீரட்டேஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | சாந்தநாயகி | |
தல விருட்சம் | – | மாமரம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கீழ்படப்பை | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கிருத்திகை, ரோகிணி முதலான 27 பெண்கள், தட்சனின் பிள்ளைகள். இவர்களை, சந்திரன் மணந்து கொண்டான். ஆனால், அவன் ரோகிணியின் மீது மட்டும் அன்பு காட்டினான். இதனால் வருந்திய மற்ற மனைவியர், தங்களது தந்தை தட்சனிடம், கணவர் தங்களைப் புறக்கணிப்பதாகக் கூறினர். எனவே கோபம் கொண்ட தட்சன், சந்திரனின் கலைகள் தேயும்படியாக சபித்து விட்டான். இந்த சாப விமோசனத்திற்காக சந்திரன், பூலோகத்தில் பல தலங்களில் சிவனை வழிபட்டான். இத்தலத்திலும் ஒரு இலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். சிவன் அசுரர்களை அழித்த எட்டு தலங்கள், “அட்டவீரட்ட தலங்கள்” எனப்படுகிறது. இதில் விழுப்புரம் அருகிலுள்ள திருக்கோவிலூர், அந்தகாசுரனை அழித்த தலமாகும். இத்தலத்து சிவனின் அம்சமாக, இங்கு சிவன் காட்சி தருவதாக ஐதீகம். எனவே, இங்கு சிவன் “வீரட்டேஸ்வரர்” என்றே அழைக்கப்படுகிறார். தலமும், “உப வீரட்ட தலம்” என்றழைக்கப்படுகிறது. பிற்காலத்தில் இப்பகுதியை, ஆட்சி செய்த நந்திவர்ம பல்லவன் என்ற மன்னன், ஒரே சமயத்தில் 108 சிவாலயங்கள் திருப்பணி செய்து, ஒரே நாளில் கும்பாபிஷேகம் செய்தான். அதில் இத்தலமும் ஒன்று.