Tag Archives: பெத்தவநல்லூர்
மாயூரநாதர் சுவாமி திருக்கோயில், பெத்தவநல்லூர்
அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில், பெத்தவநல்லூர், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.
+91 4563 222 203
காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மாயூரநாதர் | |
அம்மன் | – | அஞ்சல் நாயகி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | காயல்குடி நதி | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | பெத்தவநல்லூர், ராஜபாளையம் | |
மாவட்டம் | – | விருதுநகர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொரு காலத்தில் சிவநேசி என்ற பெண் சிவன் கோயில் வழியாகத் தன் தாய் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாள். சிவநேசிக்கு அது பேறுகால சமயம். நடந்து சென்று கொண்டிருக்கும் போதே அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். அங்கிருந்த சிவன் கோயில் வாசலில் அமர்ந்து அழுது புரண்டாள். இந்த துன்பத்தை கண்ட கருணை வடிவான சிவன் தானே அந்த பெண்ணின் தாய் உருவில் வந்து மகப்பேறு பார்த்தார். அத்துடன் குழந்தையை பெற்ற பெண்ணின் தாகம் தீர காயல்குடி நதியை வரவழைத்து, அதன் நீரை மருந்தாக பருகவும் உதவினார். (இந்த நதியே தற்போது இந்தக் கோயிலின் தீர்த்தமாக உள்ளது)
தன் பெண்ணின் பிரசவச் செய்தியை கேள்விப் பட்ட தாய், சிவனே தன் உருவில் தாயாக வந்து பிரசவம் பார்த்ததை அறிந்து இறைவனை நினைத்து வழிபட்ட போது, சிவன் உமையவள் சமேதராய் காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.