Tag Archives: தேவிகாபுரம்
கனககிரீசுவரர் திருக்கோயில், தேவிகாபுரம்
அருள்மிகு கனககிரீசுவரர் திருக்கோயில், தேவிகாபுரம், திருவண்ணாமலை மாவட்டம்.
+91- 4173-247 482, 247 796.
மலைமீதுள்ள கோயில் காலை 8 முதல் 10 மணிவரை மட்டுமே திறந்திருக்கும். கீழே உள்ள அம்மன் கோயில் காலை 6 முதல் 12மணி, மாலை 5 முதல் 8 மணிவரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கனககிரீசுவரர் | |
அம்மன் | – | பெரியநாயகி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | சிவதீர்த்தம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | தேவக்காபுரம் | |
ஊர் | – | தேவிகாபுரம் | |
மாவட்டம் | – | திருவண்ணாமலை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒரு சமயம் அம்மையும் அப்பனும் கயிலையில் வீற்றிருக்கும்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் சக்தியை நீக்கி சிவனை மட்டும் வணங்கிச் சென்றார். அதுகண்டு வருத்தமடைந்த அன்னை, இறைவனை நோக்கி வணங்கி,”அய்யனே. தங்களுடலில் சரி பாதியை எனக்கு வழங்கியருள வேண்டும்” என்று வேண்டினாள்.
இறைவனும் சக்தியை நோக்கி, “உமையே! நீ பூவுலகம் சென்று கச்சியம்பதியில்(காஞ்சிபுரம்) காமாட்சி என்ற பெயருடன் தவமிருந்து என்னை பூஜித்து வா. உரிய காலத்தில் உன்னை மணந்து கொள்வேன். பின்னர் திருவருணைக்கு (திருவண்ணாமலை) வந்து வழிபாடு செய்யும்போது உமக்கு இடப்பாகம் தருவேன்” என்று உறுதியளித்தார். அவ்வண்ணமே அன்னை கச்சியம்பதி வந்து தவமிருந்தார். பின்னர் திருவருணைக்கு செல்லும்போது வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டலம் தங்கி இங்குள்ள கனககிரி நாதரை வணங்கித் தவமிருந்தார். அதனால் இத்தலம் தேவிகாபுரம் என்று பெயர் பெற்றது என்பர். பின்னர் திருவருணைக்கு சென்று ஏகாம்பரநாதரை மணந்து இடப்பாகம் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.