Tag Archives: காவளம்பாடி-திருநாங்கூர்
அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், காவளம்பாடி(திருநாங்கூர்)
அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், காவளம்பாடி(திருநாங்கூர்)- 609 106, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91-4364-275 478 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்) பாமா, ருக்மணி |
தாயார் | – | செங்கமல நாச்சியார், மடலவரல் மங்கை |
தீர்த்தம் | – | தடமலர்ப்பொய்கை தீர்த்தம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | காவளம்பாடி, திருநாங்கூர் |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
“காவளம்” என்றால் பூஞ்சோலை. துவாரகை போல பூஞ்சோலைகள் மிக்க ஒரு இடம் தேடி, அங்கே பாமாவுடன் தங்க விரும்பினார் கிருஷ்ணர். அப்படி அமர்ந்த இடத்தில் ஒன்று தான் காவளம்பாடி. இன்றைக்கும் கூட இந்த இடம் மிகவும் பசுமையாகத்தான் உள்ளது. இத்தலத்தை வட துவாரகைக்கு இணையாகத் தல புராணம் கூறுகிறது. பாமாவுக்கு பிடித்தமான தேவலோக மலரான பாரிஜாத பூச்செடி கிருஷ்ணனால் பூமியில் நடப்பட்ட இடம் தான் காவளம்பாடி. சிவனுக்கும், சேனைத்தலைவர் விஷ்வக்சேனருக்கும் இங்கு கிருஷ்ணன் காட்சி தந்துள்ளார். கோயில் சிறியது தான் என்றாலும், மிக அருமையாக உள்ளது.