Tag Archives: இலுப்பைக்குடி

அருள்மிகு அட்சய பைரவர், இலுப்பைக்குடி

அருள்மிகு அட்சய பைரவர், இலுப்பைக்குடி, சிவகங்கை மாவட்டம்.

+04561 – 221 810, 94420 43493 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 – 12 மணி, மாலை 4 – 7.30 மணி வர திறந்திருக்கும்.

 

பொதுவாக, பைரவரின் கையில் கபாலம் இருக்கும். ஆனால், காரைக்குடி அருகிலுள்ள இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோயிலில், பைரவர் அட்சய பாத்திரத்துடன் காட்சி தருகிறார். இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது சிறப்பு.

சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளைப் பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார். மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு, “சுயம்பிரகாசேஸ்வரர்என்றும், “தான்தோன்றீஸ்வரர்என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

தான்தோன்றீஸ்வரர் கோயில், இலுப்பைக்குடி

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் கோயில், இலுப்பைக்குடி, அரியக்குடி போஸ்ட், சிவகங்கை மாவட்டம்.

+91- 4561 – 221 810, 94420 43493

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தான்தோன்றீஸ்வரர்
அம்மன் சவுந்தர்யநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பைரவர் தெப்பம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இலுப்பை வனம்
ஊர் இலுப்பைக்குடி
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார். மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்று தங்கம் தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு, “சுயம்பிரகாசேஸ்வரர்என்றும், “தான்தோன்றீஸ்வரர்என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

இத்தலத்து பைரவர், “ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடதுபுறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது.