Tag Archives: கைலாசபட்டி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாசபட்டி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாசபட்டி, தேனி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கைலாசநாதர்

தாயார்

சிவகாமியம்மன்

தல விருட்சம்

வில்வம்

தீர்த்தம்

சுனைநீர்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

கைலாசபட்டி

மாவட்டம்

தேனி

மாநிலம்

தமிழ்நாடு

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான வரலாற்று சிறப்புமிக்கது. அகத்திய முனிவர் இத்திருத்தலத்தை பற்றி கைலாசநாதர் கோயில் கண்டேன். அங்கு ஓர் சுனை கண்டேன் என்று பாடியுள்ளார். இம்மலைக்கு தியான மலை என்ற பெயரும் உண்டு. சட்டநாத மாமுனிவர் இம்மலைக்கு வந்து தியானம் செய்துள்ளதாக வரலாறு கூறுகிறது. கைலாசநாதர் மலைக்கு திருவாச்சி போன்று மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது சிறப்பு. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் இத்திருக்கோயிலில் பெரிய தேர் இழுக்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்றாக மலையில் இரும்பு வடம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கல்வெட்டுகளும் உள்ளன.

இங்குள்ள வெள்ளை விநாயகர் கோயில், குடைவரைக் கோயிலாக அமையப்பெற்றது. பிள்ளையார்பட்டி விநாயகருக்கு அடுத்தபடியாக குடைவரை விநாயகராக இந்த வெள்ளை விநாயகர் சிறப்பு பெற்றவர். பவுர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்கள் நோய்களை விலக்கி ஆரோக்கியத்தை தரும் ஆற்றல் கொண்டது இந்த மலை. அத்துடன் நவகிரகக் குன்றுகளையும் சுற்றி வந்த பலன் கிடைப்பதால், கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.