Tag Archives: குன்றக்குடி
அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், குன்றக்குடி
அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்.
+91 – 4577 – 264227, 97905 83820
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
மூலவர் | – |
சண்முகநாதர் |
|
அம்மன் | – |
வள்ளி, தெய்வானை |
|
தலவிருட்சம் | – |
அரசமரம் |
|
தீர்த்தம் | – |
தேனாறு |
|
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப்பெயர் | – |
அரசவனம் |
|
ஊர் | – |
குன்றக்குடி |
|
மாவட்டம் | – | சிவகங்கை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சூரனாதியோர் தேவர்களைப் பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முகனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை, நாங்கள்தான் மயிலை விட வேகமாகப் பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாகப் பொய் சொன்னதால், மயில் கோபம் அடைந்தது. அன்னத்தையும், கருடனையும் மயில் விழுங்கி விட்டது. இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போகச் சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப்பெருமானை நோக்கித் தவம் இருந்தது. முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார். பின் மயிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாகத் தோற்றத்தில் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தந்தார். மிகவும் சிறப்பு வாய்ந்த இக்கோயில் பாடல் பெற்ற திருத்தலமாகும்.
முருகனது ஊர்தியாகிய மயில் அப்பெருமான் சாபத்தால் மயிலுருவத்தில் மலையாக இருந்து, சாபவிமோசனம் பெற்றதால் “மயில்மலை” என்று பெயர் வந்தது. இம்மலை மயில்வடிவமாக இருப்பதாக கூறுகிறார்கள். இதன் உயரம் அடிவாரத்திலிருந்து 40 மீட்டர். மலை மீதுள்ள இராஜகோபுரத்தின் உயரம் 16.15 மீட்டர். ஆக மலைக்கோயிலின் உயரம் 56.15 மீட்டர். ஆறே முக்கால் ஏக்கர் பரப்பளவில் இம்மலை அமைந்துள்ளது.
சண்முகநாதப் பெருமான் – குன்றக்குடி
சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது பாண்டியன் மன்னன் பெரிய மருதுவுக்கு முதுகில் “இராசபிளவை” என்னும் கடுமையான கட்டி வந்தது. அப்பொழுது குன்றக்குடியில் உப்பு வணிகம் செய்து வந்த காடன் செட்டியாரை அணுகினார். அவரும் குன்றக்குடியானை மனதில் வேண்டி விபூதி கொடுத்தார். பெரிய மருதுவின் துன்பம் நீங்கியது. அன்றிலிருந்து குன்றக்குடி சண்முகநாதப் பெருமானின் மீது அளவற்ற பக்திகொண்டான். குதிரையி வரும்பொழுது எந்த இடத்தில் கோயில் தென்படுகிறதோ, அதே இடத்தில் குதிரையை விட்டு இறங்கி கோயில் வரை நடந்தே வருவாராம்.
மயில் படுத்து அடைகாப்பதைப்போன்ற மலையின்மீது பெருமானுக்குத் திருக்கோயில் எழுப்பினான். மலையின் சுற்றளவு 1 கல் தொலைவு. கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு. மலையேறும் படிகள் மயிலின் தோகை போலிருக்கும். ஒட்டுமொத்தமாய், முருகனின் வாகனமே அவனிருக்கும் மலையாக இருப்பதே குன்றக்குடியின் விதப்பு. மலையின் 120 படிகளும் கல்வெட்டுக்கள்தான். நேர்த்திக்கடனுக்காகப் பக்தர்கள் செதுக்கியவைகள்.