Tag Archives: சோழவந்தான்

அருள்மிகு ஜெனகை நாராயணப் பெருமாள் திருக்கோயில், சோழவந்தான்

அருள்மிகு ஜெனகை நாராயணப் பெருமாள் திருக்கோயில், சோழவந்தான், மதுரை மாவட்டம்.

+91-4543-258987, 94867 31155 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

நாராயணன்

தாயார்

ஜெனகைவல்லி, ஸ்ரீ‌தேவி, பூதேவி

ஆகமம்

பாஞ்ராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

ஜனகையம்பதி

ஊர்

சோழவந்தான்

மாவட்டம்

மதுரை

மாநிலம்

தமிழ்நாடு

ஜனகனின் மகள் சீதையாக மகாலட்சுமியே பிறந்து பெருமை சேர்த்தாள். மகரிஷியான ஜனகனுக்கோ தம்மிடம் வளரும் இந்தக் குழந்தை யார் என்பதை உணர முடிந்தது. மகாலட்சுமியை எந்த மனிதனுக்கு மணம் முடிப்பது என்பது பெரிய பாரமாகவே இருந்தது. சாதாரணமான பெண்ணைப் பெற்றவனுக்கே மாப்பிள்ளை கிடைக்க பாடாய்பட வேண்டியிருக்க திருமகளுக்கு எப்படி மாப்பிள்ளை தேடுவது என்ற கவலையில் ஜனகன் துடித்தார்.

இதற்காகவே நாராயணனே பிறப்பெடுத்து வந்து இந்தப் பெண்னண கல்யாணம் செய்து கொண்டால் பாரம் நீங்கும‌ே என்று கவலைப்பட்டு சோழவந்தானில் வந்து தவமிருந்தான். அதுவே இத்தலம் அமைய காரணமாக உள்ளது. ஸ்ரீமன் நாராயணனை மாப்பிள்ளையாக அடையவேண்டித் தவமிருந்த ஜனகனுக்கு நினைவுச் சின்னம் ஒன்று இருக்கிறது என்றால் அது சோழவந்தான் ஜனகை நாராயணன் கோயில்தான். ஜனகனின் தவப்பயனால் ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக வந்து சீ‌தை‌யைக் கைபிடித்தார். இந்த பெரும் செயல் செய்த ஜனகனுக்கு நன்றி உணர்வோடு உள்ள கோயில்தான் இது.

திருமூலநாத சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், சோழவந்தான்

அருள்மிகு திருமூலநாத சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், சோழவந்தான், மதுரை மாவட்டம்.

+91 – 4543 – 260143

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். திருவிழா நாட்களில் அதிகாலையிலேயும் நடை திறக்கப்படுகிறது.

மூலவர் திருமூலநாத சுவாமி (திருமூலநாத உடையார், மூலஸ்தான உடையார்)
உற்சவர் நடராஜர்
அம்மன் அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சுவர்ண புஷ்கரணி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சோழவந்தான்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

நூற்றாண்டுகளுக்கு முன்பு, மக்கள் இறை பக்தியில் நாட்டம் இல்லாது இருந்தபோது, அவர்களை இறை பக்தியில் ஈடுபடுத்த வேண்டுமென ஈசனும் உமையாளும் முடிவெடுத்தனர். அதன்படி மக்களிடம் இறை உணர்வினை ஏற்படுத்திட யாரை அனுப்புவது என நந்திகேஸ்வரரிடம் கேட்டபோது, சுந்தரரை அனுப்பும் படி அவர் கூறினார். அதன் படி சுந்தரர் பூமிக்கு வர, ஒரிடத்தில் மாடு மேய்ப்பவன் ஒருவன் இறந்து கிடக்க அவனைக் சுற்றி மாடுகள் அழுது கொண்டிருந்த காட்சியைக் கண்டு மனம் இறங்கி, அவனது உடலில் புகுந்து மாற்று உரு பெற்றார். அவனது உருவிலேயே வீட்டிற்கு சென்ற அவர் வந்த காரியம் நிறைவேற்றாது இருந்தார். இ‌தனைக் கண்ட ஈசன் சுந்தரரின் வேலையினை உணர்த்த முனிவர் வேடத்தில் சென்று அவரிடம் யாசகம் கேட்டார். சுந்தரர் உணவு ‌கொண்டு வர, அங்கு முனிவர் வேடத்தில் இருந்த ஈசனைக் காணாததைக் கண்டு கலங்கினார். அப்‌போது அங்கே தரையில் கால் தடம் இருந்ததைக் கண்டு அதனைப் பின் த‌ொடர்ந்தார். அத்தடம் நேரே சிதம்பரம் சென்றடைய, சுந்தரர், சிவனே முனிவர் வடிவில் வந்ததை உணர்ந்தார். தலம் இருக்கும் தென்கரை பகுதியில் திருமூலநாதர் காட்சி தந்தார். அதன் பின் இப்பகுதியில் திருமூலநாதருக்கு சிவாலயம் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

சிவ பெருமான், மூலநாதராக வீற்றுள்ள இத்தலத்தில் தனியாக உள்ள அகிலாண்டேஸ்வரி சந்நிதியின் எதிரே சுவர்ண புஷ்பகரிணி எனும் தீர்த்த குளம் உள்ளது. இதன் கரையில் அம்பாள் அகி‌லாண்டேஸ்வரி தவம் புரிந்து சிவன‌ை மணம் புரிந்ததாக வரலாறு கூறகிறது.