Tag Archives: திருஆதனூர்
அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், திருஆதனூர்
அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், திருஆதனூர் – 612 301. பாபநாசம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 435 – 2000 503 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆண்டளக்கும் ஐயன் |
உற்சவர் | – | ஸ்ரீரங்கநாதர் |
தாயார் | – | பார்க்கவி |
தல விருட்சம் | – | புன்னை, பாடலி |
தீர்த்தம் | – | சூர்ய, சந்திர தீர்த்தம் |
ஆகமம் | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | ஆதனூர் |
மாவட்டம் | – | தஞ்சாவூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையைத் தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக்கண்ட பிருகு கோபம் கொண்டு, இந்திரனை பூவுலகில் சாதாரண மனிதனாகப் பிறக்கும்படி சபித்தார்.
தான் செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண் டினான் இந்திரன். அப்போது மகாலட்சுமி “நான் பூலோகத்தில் பிருகு மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளைத் திருமணம் செய்யும்போது சாபம் நீங்கப்பெறும்” என்றார். அதன்படி மகாலட்சுமி பிருகுவின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தலத்தில் அவளைத் திருமணம் செய்து கொண்டார். இங்கு வந்த இந்திரன் பெருமாளையும், மகாலட்சுமியையும் வணங்கினான். மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார்.