Tag Archives: திருக்குருகாவூர்
அருள்மிகு வெள்ளடைநாத சுவாமி திருக்கோயில், திருக்குருகாவூர்
அருள்மிகு வெள்ளடைநாத சுவாமி திருக்கோயில், திருக்குருகாவூர், வடகால் போஸ்ட், சீர்காழி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 9245 612 705 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வெள்ளடைநாதர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | காவியங்கண்ணி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | பால்கிணறு | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்குருகாவூர், வெள்ளடை | |
ஊர் | – | திருக்குருகாவூர் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சம்பந்தர், சுந்தரர் |
சைவ சமயம் தழைக்கப் பாடுபட்ட சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாவம் நீங்க, சம்பந்தர், காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட விரும்பினார். காசிக்கு செல்ல உத்திரவு அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார். சம்பந்தருக்கு காட்சி தந்த சிவன், அவரை சீர்காழிக்கு செல்ல வேண்டாமென்றும், இத்தலத்தில் அவருக்கு கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்கு வந்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இங்கிருந்த கிணற்றில் கங்கையை பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர், பாவம் நீங்கப்பெற்றார். பிற்காலத்தில் இத்தலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.