Tag Archives: ஆனைமலை
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை, பொள்ளாச்சி – 642104, கோயம்புத்தூர் மாவட்டம்.
*********************************************************************************************************
+91 – 4253 282 337, 283 173
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்: – மாசாணியம்மன்(மயானசயனி) தீர்த்தம்: – கிணற்றுநீர் தீர்த்தம்
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்:- உம்பற்காடு
ஊர்: – பொள்ளாச்சி, ஆனைமலை
மாநிலம்: – தமிழ்நாடு
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை நன்னன் எனும் அரசன் ஆட்சி செய்தான். அவன் ஆழியாற்றின் கரையில் மாமரம் ஒன்றை வளர்த்து வந்தான். அம்மரத்தின் காய், கனிகளை யாரும் பறிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது எனவும் கட்டளையிட்டிருந்தான்.
ஓர்நாள், ஆழியாற்றில் குளித்துக்கொண்டிருந்து இளம்பெண் ஒருத்தி, ஆற்றில் மிதந்து வந்த அம்மரத்தின் கனியை உண்டுவிட்டாள். இதையறிந்த மன்னன், அவளுக்கு மரண தண்டனை கொடுத்தான். ஊர்மக்கள் எதிர்த்தனர். ஆனால், மன்னன் தண்டனையை நிறைவேற்றி விட்டான்.
வருத்தம் கொண்ட மக்கள் மயானத்தில் அவளை சமாதிப்படுத்தி, அவ்விடத்தில் அவளைப் போலவே சயனித்த நிலையிலான உருவத்தை செய்து வைத்தனர். காலப்போக்கில் அவளே ஊர்காக்கும் அம்மனாக இருந்திட, மக்கள் இவ்விடத்திலேயே கோயில் எழுப்பி விழிபட்டனர்.