Tag Archives: ஆரணி
புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில், ஆரணி-புதுக்காமூர்
அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில், ஆரணி(புதுக்காமூர்), திருவண்ணாமலை மாவட்டம்.
+91 97891 56179, 96294 73883
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | புத்திரகாமேட்டீஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | பெரிய நாயகி | |
தல விருட்சம் | – | பவளமல்லி | |
தீர்த்தம் | – | கமண்டல நதி | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | தர்மாரண்யஷேத்ரம் | |
ஊர் | – | ஆரணி | |
மாவட்டம் | – | திருவண்ணாமலை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லை. தனக்கு பின் நாட்டை ஆள இளவரசர் இல்லாததால் தசரதர் மிகவும் வருந்தினர். குழந்தைப்பேறு உண்டாவதற்கு வழி சொல்லும்படி, தன் குலகுரு வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்டார். அவர், இத்தலத்தைச் சுட்டிக்காட்டி சிவனை வழிபட அந்த பாக்கியம் கிடைக்குமென்றார். அதன்படி தசரதர், இவ்விடத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, ரிஷ்யசிருங்க மகரிஷியின் தலைமையில் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தி சிவனை வழிபட்டார். இதன்பின், அவர் இராமர், இலட்சுமணன், பரதன், சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகளைப் பெற்றார். இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பிய தசரதர், அவருக்கு யாகத்தின் பெயரால் “புத்திரகாமேட்டீஸ்வரர்” என்றே பெயர் சூட்டினார்.