Tag Archives: மேலத்திருவேங்கடநாதபுரம்
அருள்மிகு வெங்கடாசலபதி (தென்திருப்பதி) திருக்கோயில், மேலத்திருவேங்கடநாதபுரம்
அருள்மிகு வெங்கடாசலபதி (தென்திருப்பதி) திருக்கோயில், மேலத்திருவேங்கடநாதபுரம் – 627 006, திருநெல்வேலி மாவட்டம் .
+91- 462 – 2341292, 2340075 97918 66946 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருவேங்கடமுடையான் |
உற்சவர் | – | ஸ்ரீநிவாஸன் |
தாயார் | – | அலமேலு |
தல விருட்சம் | – | நெல்லி |
தீர்த்தம் | – | ஸ்ரீநிவாச தீர்த்தம் |
ஆகமம்/பூசை | – | வைகானஸம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருநாங்கோயில் |
ஊர் | – | மேலத்திருவேங்கடநாதபுரம் |
மாவட்டம் | – | திருநெல்வேலி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பலநூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதி “வைப்ராஜ்ஜியம்” என்ற பெயரில் அடர்ந்த வனமாக இருந்தது. இங்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் வியாசமாமுனிவரின் முதன்மைச்சீடரான பைலர், ஸ்ரீநிவாஸப்பெருமாளை நினைத்து தவம் செய்தார். அங்கு பெருமாளின் திருவுருவமோ, சிலையோ ஏதுமில்லாததால் தன் மனதில் திருமாலை எண்ணிக்கொண்டே, கோடி மலர்களைத் தூவி வணங்கினார். ஏழாம் நாளில் பெருமாளை எண்ணி அவர் அர்ச்சனை செய்த மலர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து மிகப்பெரும் ஜோதியாக வானில் உயரே எழுந்தன. ஜோதியின் நடுவே, காலடியில் தாமிரபரணி நதி தாய் வீற்றிருக்க, ஸ்ரீநிவாஸப்பெருமாள் எழுந்தருளி பைலருக்கு அருட்காட்சிதந்தார். அவரது அருள்வடிவமான திருக்கோலத்தைக் கண்டு தரிசனம் செய்து ஆனந்தக் கூத்தாடிய பைலர் வடக்கே திருப்பதி வெங்கடாஜலபதியாக குடிகொண்டு அருள்வது போல இவ்விடத்திலும் வீற்றிருந்து பக்தர்களுக்கு திருவருள் புரிய வேண்டுமென வேண்டிக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஸ்ரீநிவாஸர் ஏற்றுக்கொண்டார். ஸ்ரீதேவி, பூதேவி, அலர்மேலுமங்கை சமேதராக ஸ்ரீ நிவாஸப் பெருமாள் இங்கேயே தங்கினார்.