Tag Archives: படவேடு

அருள்மிகு யோகராமச்சந்திர மூர்த்தி திருக்கோயில், படவேடு

அருள்மிகு யோகராமச்சந்திர மூர்த்தி திருக்கோயில், படவேடு, திருவண்ணாலை மாவட்டம்.

+91 4181-248 224, 94435 40660

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை மணி 3 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

யோக ராமச்சந்திரர்

உற்சவர்

கோதண்டராமர்

தாயார்

செண்பகவல்லி

தல விருட்சம்

செண்பகமரம்

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

செண்பகாரண்யம்

ஊர்

படவேடு

மாவட்டம்

திருவண்ணாமலை

மாநிலம்

தமிழ்நாடு

உலகத்தின் தோற்றம் மற்றும் அதன் இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது வேதங்கள் ஆகும். இத்தகைய வேதத்திற்கு மூலமாக இருப்பவர் யார்? அதை இயற்றியவர் யார்? அதன் சாரம் என்ன?” என ஆஞ்சநேயருக்கு சந்தேகம் உண்டானது. தன்னுடைய சந்தேகம் தீர்க்கும்படி ஆஞ்சநேயர், இராமபிரானை வேண்டினார். சுவாமி சின்முத்திரை காட்டிய தனது வலது கையை நெஞ்சில் வைத்து, “எல்லா உயிர்களுக்குள்ளும் பரமாத்மா என்னும் இறைவன் இருப்பதைப்போல, நானே வேதமாகவும், வேதத்திற்குள் அதன் தத்துவமாகவும் இருக்கிறேன்என்று உணர்த்தினார். இந்த அமைப்பில் அமைந்துள்ள கோயில் இது. யோக நிலையில் இருப்பதால் சுவாமிக்கு, “யோக ராமச்சந்திரமூர்த்திஎன்ற பெயர் ஏற்பட்டது.

புஷ்பக விமானத்தின் கீழ், இராமபிரான் வீராசனத்தில் அமர்ந்து, சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்திருக்கிறார். அருகில் சீதாப்பிராட்டி அமர்ந்திருக்கிறாள். இராமர், சீதை இருவரின் சிலையும் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி வடிக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு அருகில், ஆஞ்சநேயர் அமர்ந்து கையில் ஓலைச்சுவடி வைத்திருக்கிறார். ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்தவர் என்பதால், இவர் இங்கு குரு அம்சமாக போற்றப்படுகிறார். எனவே, சக்கரவர்த்திக்குரிய போர் ஆயுதங்கள் எதுவும் இல்லை. அருகிலுள்ள இலட்சுமணர் மட்டும் கையில் வில், அம்பு வைத்திருக்கிறார்.

அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில், படவேடு

அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில், படவேடு, திருவண்ணாமலை மாவட்டம்.

+04181 248 224, 248 424 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.40 பகல் 1மணி, மாலை 3 இரவு 8.30 மணி வரை வெள்ளி, ஞாயிறு மற்றும் விசேட நாட்களில் தரிசன நேரம் மாறுபடும்.

மூலவர் ரேணுகாம்பாள்
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் கமண்டலநதி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் படவேடு
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

ரேணுகாதேவி இரைவத மகாராஜனின் மகளாக பிறந்து ஜமதக்னி முனிவரை மணம் முடித்து பரசுராமரைப் பெற்றெடுக்கிறாள். கற்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவள். கணவரது பூஜைக்கு தனது சக்தியை பயன்படுத்தி, தினமும் ஆற்றுமணலில் செய்த புது பானையால் கமண்டலநதியிலிருந்து தண்ணீர் கொண்டு செல்வது வழக்கம். ஒருமுறை வான்வெளியில் சென்ற கந்தர் வனின் அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டதால், சக்தியிழந்து ஆற்று மணலில் குடம் செய்ய முடியாமல் போனது. தன் மனைவியின் கற்புத்திறன் மீது சந்தேகம் கொண்ட, ஜமதக்னி முனிவர், தன் மகன் பரசுராமரிடம், தாயைக் கொல்லும்படி ஆணையிட்டார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கேற்ப பரசுராமரும் தாய் ரேணுகா தேவியை வெட்டினார்.