Tag Archives: குண்டுக்கரை
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம்
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
சுவாமிநாத சுவாமி |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
குண்டுக்கரை |
|
மாவட்டம் | – | இராமநாதபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
300 ஆண்டுகளுக்கு முன் இராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி, குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது, இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி,”குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு, புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும்” எனக் கூறி மறைந்தார். இராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று, அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமிமலையானின் பெயரான “சுவாமிநாதன்” என்று பெயர் சூட்டினார்.