Tag Archives: காட்டுமன்னார் கோவில்
அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில் , காட்டுமன்னார் கோவில்
அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில் , காட்டுமன்னார் கோவில் -608 301. கடலூர் மாவட்டம்
***************************************************************************************************
+91- 99424 44928 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்: – குருங்குடில் காத்தாயி அம்மன், பச்சை வாழியம்மை, பூங்குறத்தியம்மை
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – காட்டுமன்னார் கோவில்
மாநிலம்: – தமிழ்நாடு
சோழர்கள் தங்கள் குலதெய்வமாக அம்பிகையை பல்வேறு பெயர்களில் வழிபாடு செய்து வந்தனர். இவர்களில், முதலாம் விக்கிரமசோழன் காத்தாயி அம்மனை வழிபட்டு வந்தான். ஒருமுறை இவன், மதுரையை ஆண்ட வமிசசேகர பாண்டியன் மீது படையெடுத்தான்.
பாண்டியனுக்கோ போர் செய்வதிலும், உயிர்கள் அழிவதிலும் உடன்பாடில்லை. சிவ பக்தனான அவன், சோழனிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும்படி சொக்கநாதரிடம் வேண்டினான்.
மன்னனின் வேண்டுதலை ஏற்ற சிவன், குறவன் வேடத்தில் சென்று சோழனுடன் போரிட்டார். அவரை எதிர்க்க முடியாத மன்னன், குறவனாக வந்திருப்பது சிவன் என அறிந்து, அவரது பாதத்தில் சரணடைந்தான்.
சிவன் அவனுக்கு காட்சி தந்து, “மண்ணாசை கொண்டு செய்யப்படும் போரினால், உயிர் இழப்பு தான் ஏற்படும். அதை விடுத்து வேறொரு நன்மையும் உண்டாகாது,” என உபதேசம் செய்து, “மறுபிறப்பிலும் மன்னனாகப் பிறந்து நல்லாட்சி புரிவாய்” என ஆசீர்வதித்து மறைந்தார்.
இம்மன்னனே மறுபிறப்பில் இரண்டாம் விக்கிரமசோழனாக பிறந்தான். முற்பிறப்பில் தான் வழிபட்ட காத்தாயி அம்பாளை தொடர்ந்து வழிபட்டான்.
மன்னனின் பங்காளிகள், இவனது ஆட்சிக்கு தொந்தரவு செய்தனர். அவர்களை ஏதும் செய்ய விரும்பாத மன்னன், அம்பிகையிடம்,”தாயே! நான் முற்பிறப்பில் பாண்டியனுடன் போர் செய்யச் சென்றபோது, சிவனே குறவனாக வந்து போரை தடுத்து என்னை ஆட்கொண்டார். இப்போது பங்காளிகளே எனக்கு தொந்தரவு தருகின்றனர். இதிலிருந்து நீயே என்னைக் காக்க வேண்டும்,” என வேண்டினான்.