Tag Archives: கூடலூர்
அருள்மிகு கூடல் அழகிய பெருமாள் திருக்கோயில், கூடலூர்
அருள்மிகு கூடல் அழகிய பெருமாள் திருக்கோயில், கூடலூர், தேனி மாவட்டம்.
+91- 4554 – 230 852 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 10.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
கூடல் அழகிய பெருமாள் |
உற்சவர் |
– |
|
சுந்தர்ராஜர் |
தாயார் |
– |
|
மகாலட்சுமி |
தல விருட்சம் |
– |
|
புளியமரம் |
ஆகமம் |
– |
|
பாஞ்சராத்ரம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் |
– |
|
திருக்கூடலூர் |
ஊர் |
– |
|
கூடலூர் |
மாவட்டம் |
– |
|
தேனி |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
சிவனிடம் வரம் பெற்ற அசுரன் ஒருவன், தேவர்களை துன்புறுத்தினான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர் அசுரனின் அழிவு குறித்து ஆலோசிக்க, தேவர்களை அழைத்தார். அவர்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இத்தலத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்பு, அசுரனிடமிருந்து தேவர்களைக் காத்த மகாவிஷ்ணு, அவர்களின் வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். காலப்போக்கில் இங்கு சுவாமிக்கான வழிபாடுகள் மறைந்துபோனது. பிற்காலத்தில் இப் பகுதியை ஆண்ட, சிற்றரசர் ஒருவர் மதுரை கூடலழகர் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். தினமும் அவரை தரிசித்துவிட்டு, தனது பணியைத் துவங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அரசருக்கு தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில், கூடலழகருக்கு கோயில் எழுப்ப வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால் எங்கு கோயில் அமைப்பது? சிலை எப்படி அமைப்பது? என அவருக்குத் தெரியவில்லை. தனக்கு அருளும்படி பெருமாளிடம்வேண்டினார். அவரது கனவில் தோன்றிய கூடலழகர், இத்தலத்தை சுட்டிக்காட்டி கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி மன்னர், தான் கண்ட அமைப்பில் தாயார்களுடன் சுவாமிக்கு சிலை வடித்து, இங்கு கோயில் எழுப்பினார். சுவாமிக்கு, “கூடல் அழகர்” என்றே திருநாமம் சூட்டினார்.
திவ்ய தேசங்களில் மதுரை கூடலழகர், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் ஆகிய தலங்களில் பெருமாள், அஷ்டாங்க விமானத்துடன் அமைந்த சன்னதியில் காட்சி தருகிறார். இத்தலங்கள் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. இதைப்போலவே இக்கோயிலிலும் கூடலழகர், அஷ்டாங்க விமானத்தின் கீழ் எழுந்தருளியிருக்கிறார். இந்த விமானம் இராமாயணம் மற்றும் கிருஷ்ணரின் லீலைகளை விளக்கும் சிற்பங்களுடன் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு கண்ணகி திருக்கோயில், கூடலூர்
அருள்மிகு கண்ணகி திருக்கோயில், கூடலூர் – 625 518 தேனி மாவட்டம்.
********************************************************************************
+91- 4554 – 231 019, 98425 55575 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்: – கண்ணகி (பகவதி அம்மன்)
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்: – கூடலூர்
மாநிலம்: – தமிழ்நாடு
சோழ நாடான காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்) இருந்து, தன் கணவன் கோவலனுடன் பிழைப்பிற்காக மதுரைக்கு வந்தாள். சந்தர்ப்பவசத்தால் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் கால்சிலம்பை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு, கோவலன் கொல்லப்பட்டான். கண்ணகி மன்னனிடம் சென்று நியாயம் கேட்டாள். தன் தீர்ப்பில் தவறு இருந்ததை உணர்ந்த மன்னனும், அவனது மனைவியும் உயிர் விட்டனர்.
ஆனாலும், உக்கிரம் தணியாத கண்ணகி மதுரையை எரித்தாள்.
பிறகு, தென்திசை வழியாக 14 நாட்கள் நடந்து இவ்விடத்துக்கு வந்தாள். அப்போது விண்ணுலகிலிருந்து மலர் விமானத்தில் வந்த கோவலன், கண்ணகியை அழைத்துச் சென்றான். இதைக்கண்டு ஆச்சரியமடைந்த மலைவாழ் மக்களான வேடுவர்கள், அவளைத் தெய்வமாக பாவித்து “மங்கல தேவி” என்ற பெயரில் வணங்கினர்.