Category Archives: கடலூர்

கடலூர் மாவட்டம் – ஆலயங்கள்

கடலூர் மாவட்டம் ஆலயங்கள்

அருள்மிகு

ஊர்

திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்) இராஜேந்திர பட்டினம்

பச்சைவாழியம்மன்

எழுமேடு

மார்க்கசகாயேஸ்வரர் ஒரத்தூர்
பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் ஓமாம்புலியூர்
வரதராஜப்பெருமாள் கண்ணங்குடி
திருவனந்தீஸ்வரர் காட்டுமன்னார் கோயில்

காத்தாயி அம்மன்

காட்டுமன்னார் கோவில்

பதஞ்சலீஸ்வரர் கானாட்டம்புலியூர்
சாஸ்தா சி.சாத்தமங்கலம்

வெற்றிவேல் முருகன்

சி.மானம்பட்டி

நரசிம்மர் சிங்கிரிகுடி
அனந்தீஸ்வரர் சிதம்பரம்
இளமையாக்கினார் சிதம்பரம்

காயத்ரி அம்மன்

சிதம்பரம்

கோவிந்தராஜப்பெருமாள் சிதம்பரம்
தில்லை நடராஜர் சிதம்பரம்

தில்லைக் காளி

சிதம்பரம்

உச்சிநாதர் சிவபுரி(திருநெல்வாயில்)
பால்வண்ணநாதர் திருக்கழிப்பாலை
வல்லபேஸ்வரர் திருக்கூடலையாற்றூர்
மங்களபுரீஸ்வரர் திருச்சோபுரம்
சிஷ்டகுருநாதேஸ்வரர் திருத்தளூர்

ஐயனார்

திருநாரையூர்

சவுந்தர்யேஸ்வரர் திருநாரையூர்
பாடலீஸ்வரர் திருப்பாதிரிபுலியூர்
ஆத்மநாதசுவாமி திருப்பெருந்துறை சிதம்பரம்
வாமனபுரீஸ்வரர் திருமாணிக்குழி
தேவநாத பெருமாள் திருவகிந்திபுரம்
தீர்த்தபுரீஸ்வரர் திருவட்டத்துறை
சரநாராயணப் பெருமாள் திருவதிகை
வீரட்டானேஸ்வரர் திருவதிகை
பாசுபதேஸ்வரர் திருவேட்களம் (சிதம்பரம் நகர்)
சிவக்கொழுந்தீஸ்வரர் தீர்த்தனகிரி
வரதராஜப்பெருமாள் நல்லாத்தூர்
பொன்னம்பலநாதர் (சொர்ணபுரீஸ்வரர்) நல்லாத்தூர்
நடராஜர் கோயில் நெய்வேலி
ஆதிமூலேஸ்வரர் பரங்கிப்பேட்டை

முத்துக்குமரர்

பரங்கிப்பேட்டை

இராஜகோபாலசுவாமி புதுப்பாளையம்

சிவசுப்பிரமணிய சுவாமி

புதுவண்டிப்பாளையம்

பிரளயகாலேஸ்வரர் பெண்ணாடம்

கிளியாளம்மன்

பெரியகுமட்டி

கொளஞ்சியப்பர் மணவாளநல்லூர்விருத்தாசலம்
அமிர்தகடேஸ்வரர் மேலக்கடம்பூர்
விருத்தகிரீஸ்வரர் விருத்தாச்சலம்

சிவசுப்பிரமணியர்

வில்லுடையான் பட்டு

பூவராக சுவாமி ஸ்ரீமுஷ்ணம்

அருள்மிகு திருவனந்தீஸ்வரர் திருக்கோயில், காட்டுமன்னார் கோயில்

அருள்மிகு திருவனந்தீஸ்வரர் திருக்கோயில், காட்டுமன்னார் கோயில், கடலூர் மாவட்டம்.

+91 94864 57124 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

திருவனந்தீஸ்வரர்

தாயார்

சவுந்தரநாயகி

தல விருட்சம்

தீர்த்தம்

சூரிய சந்திர புஷ்கரணி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

திருவனந்தீஸ்வரம்

ஊர்

காட்டுமன்னார் கோயில்

மாவட்டம்

கடலூர்

மாநிலம்

தமிழ்நாடு

அட்டநாகங்களில் (எட்டு நாகம்) ஒன்றான அனந்தன் தனது குறை நீங்க, இத்தல இறைவனை வழிபட இங்கு வந்தது. எனவே இவ்வூருக்கு திருவனந்தீஸ்வரம் என்ற புராணப் பெயர் இருந்தது. தற்போது காட்டுமன்னார்கோயில் எனப்படுகிறது. ஒருகாலத்தில் இங்கு வில்வ மரங்கள் அதிகமாக இருந்தன. கங்கை கொண்ட முதலாம் ராஜேந்திரசோழன், அனந்தீஸ்வரரைத் தனது குலதெய்வமாக வணங்கியுள்ளான். கோயில் கர்ப்பகிரகத்தை சுற்றிலும் வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆதித்த கரிகாலன் கொலையுண்ட வரலாறு உள்ளிட்ட தகவல்கள் இதில் உள்ளன.

அனந்தன் பூஜை செய்ததற்கு ஆதாரமாக இங்குள்ள சோமஸ்கந்தரின் கையில் நாகம் இருக்கிறது. காலசர்ப்ப தோஷம் நீங்க அனந்தீஸ்வரருக்கும், அம்பாள் சவுந்தரநாயகிக்கும் அபிஷேகம் செய்து தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இது இயலாதவர்கள் வெள்ளியிலோ பிற உலோகங்களாலே ஆன நாக வடிவிலான உருவங்களை காணிக்கை செலுத்தலாம். சிவன் சன்னதி அருகில் சனிபகவானுக்கும் சன்னதி உள்ளதால், அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவற்றின் பிடியில் உள்ளோரும் அனந்தீஸ்வரரை வணங்கி வரலாம்.