Tag Archives: திருப்பராய்த்துறை
அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருப்பராய்த்துறை
அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருப்பராய்த்துறை, திருச்சி மாவட்டம்.
+91- 99408 43571 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பராய்த்துறைநாதர் (தாருகாவனேஸ்வரர்) | |
அம்மன் | – | பசும்பொன் மயிலாம்பிகை | |
தல விருட்சம் | – | பராய் மரம் | |
தீர்த்தம் | – | அகண்ட காவேரி | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருப்பராய்த்துறை | |
மாவட்டம் | – | திருச்சி | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் |
முன்னொரு காலத்தில் இத்தலம் “தாருகாவனம்” எனப்பட்டது. இப்பகுதியில் வசித்த முனிவர்கள் அனைவரும் தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர் என்று ஆணவமும், அவர்களது மனைவியர்களே அனைவரிலும் அழகானவர்கள், கற்புக்கரசிகள் என்று அகங்காரமும் கொண்டிருந்தனர். சிவனும், மகாவிஷ்ணுவும் அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினர். சிவன் காண்போரைக் கவரும் பேரழகுடன் பிட்சாடனராகக் கையில் திருவோடு ஏந்திக் கொண்டார்.
மகாவிஷ்ணு அழகே உருவான மோகினி எனும் பெண்ணாக மாறினார். இருவரும் தாருகாவனம் வந்தனர். முனிவர்கள் பெண் வடிவில் இருந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கி அவரைப் பின்தொடர்ந்தனர்.