Tag Archives: திருவலஞ்சுழி
அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி
அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி, தஞ்சாவூர் மாவட்டம்
+91 435 245 4421, 245 4026 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருவலஞ்சுழிநாதர் | |
அம்மன் | – | பெரியநாயகி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவலஞ்சுழி | |
ஊர் | – | திருவலஞ்சுழி | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருநாவுக்கரசர் |
மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் இணைந்து, பார்கடலில் அமுதம் கடைந்தனர். வாசுகியானது மந்திர மலையின் பாரம் தாங்காமல், தனது கொடிய விஷத்தைப் பாற்கடலில் கக்கியது. அதன்படி கக்கப்பட்ட ஆலகால விஷத்தின் கொடுமை தாங்காது தேவர்களும் அசுரர்களும் ஈசனிடம் சென்று முறையிட்டனர். ஈசன் அவர்களிடம், எந்த செயல் செய்யும் முன்பு விநாயகரை வழிபட வேண்டும். எனவே நீங்கள் விநாயகப் பெருமானை வழிபட்டால் தடையின்றி அமுதம் கிடைக்க பெறுவீர்கள் என அருளினார். தேவர்களுடன் அசுரர்களும், பாற்கடலை அடைந்து கடல் நுரையினை சேர்த்து விநாயகர் வடிவமாக செய்து வழிபட்டனர். அதன்பின் பாற்கடலைக் கடைந்து, அமுதம் கிடைத்து மகிழ்ந்தனர். விநாயகர் பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால் உருவானதால் “சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்)” எனப் பெயர் பெற்றார். தேவர்களினால் தோற்றுவிக்கப்பட்டமையால் இவ்விநாயகர் தேவர்களின் ஆத்மார்த்த பூஜா மூர்த்தியாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.