Category Archives: சேலம்
சேலம் மாவட்டம் – ஆலயங்கள்
சேலம் மாவட்டம் – ஆலயங்கள் |
|
அருள்மிகு |
ஊர் |
கோதண்டபாணி ராமர் | அயோத்தியாப்பட்டணம் |
தலையாட்டி விநாயகர் | ஆத்தூர் |
வாகனப் பிள்ளையார் | ஆத்தூர் |
ஆத்தூர் |
|
கரிவரதராஜப்பெருமாள் | ஆறகழூர் |
காயநிர்மாலேஸ்வரர் | ஆறகழூர் |
உடையாபட்டி |
|
கரபுரநாதர் | உத்தமசோழபுரம் |
இலட்சுமி கோபாலர் | ஏத்தாப்பூர் |
சாம்பமூர்த்தீஸ்வரர் | ஏத்தாப்பூர் |
சித்தேஸ்வரர் | கஞ்சமலை |
கஞ்சமலை |
|
பிரசன்ன வெங்கட்ரமணர் | காருவள்ளி |
வீரபத்திரர் | குகை, சேலம் |
குமரகிரி |
|
அறப்பளீஸ்வரர் | கொல்லிமலை |
ஐயப்பன் | சாஸ்தாநகர் |
சீலநாயக்கன்பட்டி |
|
பிரசன்ன வெங்கடாஜலபதி | செவ்வாய்ப்பேட்டை |
அழகிரிநாதர் | சேலம் |
சேலம் |
|
சுகவனேஸ்வரர் | சேலம் |
ராஜகணபதி | சேலம் |
இளமீஸ்வரர் | தாரமங்கலம் |
தாரமங்கலம் |
|
கைலாசநாதர் | தாரமங்கலம் |
சோமேஸ்வரர்(லட்சுமி நரசிம்மர்) | நங்கவள்ளி |
பரமத்தி பீமேஸ்வரர் | பரமத்திவேலூர், மாவுரெட்டி |
ஆட்கொண்டீஸ்வரர் | பெத்தநாயக்கன் பாளையம் |
அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் | பேளூர் |
தான்தோன்றீஸ்வரர் | பேளூர் |
மன்னார் பாளையம் |
|
வடசென்னிமலை |
|
விருத்தாச்சலேஸ்வரர் | வெங்கனூர் |
முனியப்பன் | வெண்ணங்கொடி |
அருள்மிகு அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் திருக்கோயில், பேளூர்
அருள்மிகு அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் திருக்கோயில், பேளூர், சேலம் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலன் |
பழமை |
– |
|
1000 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
பேளூர் |
மாவட்டம் |
– |
|
சேலம் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
அன்னை பராசக்தி பல அவதாரங்களை பூமியில் எடுத்தாள். காமாட்சி, விசாலாட்சி, உலகம்மை, பார்வதி, தாட்சாயணி. இப்படி பல பெயர்களில் அவதரித்த அவள், பழங்கால மதுரையில் மீனாட்சி என்ற பெயரில் தங்கினாள். அப்போது அவளுக்கு ஒரு பக்தை இருந்தாள். அவள் மீனாட்சியைக் குழந்தையாக நினைத்து தாலாட்டு பாடுவாள்; தூங்க வைப்பாள்; தன்னை மீனாட்சியின் அன்னையாகவே உருவகம் செய்து, பக்தியில் ஆழ்ந்தாள். அவளது பக்தியை மெச்சிய மீனாட்சி, முற்பிறவியில், அவளை காஞ்சனமாலை என்ற பெயரில் அரசியாகப் பிறக்கும்படியும், அவளுக்குத் தான் மகளாகப் பிறப்பதாகவும் வாக்களித்தாள். அதன்படியே மீனாட்சியின் பிற்கால கோயில் அமைந்தது. அவளுக்கே பெருமாள் அண்ணனாக இருந்து, சுந்தரேஸ்வரரை மணம் முடித்து வைத்தார். முந்தைய பராசக்தி வடிவமான மீனாட்சி, பெருமாளுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் தாயாகத்தான் இருந்திருக்கிறாள். அவ்வாறு அவள் தாயாக அமர்ந்த தலம்தான், தனி சன்னதியில், வயதான தோற்றத்துடன் மரகதவல்லி மீனாட்சி என்ற பெயரில் இங்கு காட்சி தருகிறாள்.