Tag Archives: மாந்தோப்பு
அருள்மிகு அங்காள ஈசுவரி திருக்கோயில், மாந்தோப்பு
அருள்மிகு அங்காள ஈசுவரி திருக்கோயில், மாந்தோப்பு – விருதுநகர் மாவட்டம்.
+91-94437 74299
காலை 6 முதல் 12 மணிவரையிலும் மாலை 5 முதல் இரவு 8 மணிவரையிலும் நடை திறந்திருக்கும்.
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – மாந்தோப்பு
மாநிலம்: – தமிழ்நாடு
கன்னிப்பெண்களின் காவல் தெய்வமான அங்காள ஈசுவரி விருதுநகர் மாவட்டம், மாந்தோப்பு கிராமத்தில் வாலகுருநாதசுவாமியுடன் அருள்பாலித்து வருகிறாள். இவளை பார்த்தால் பெற்ற தாயை பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும். பல நூற்றாண்டுகளாக இத்தலத்தில் அன்னை அருளாட்சி புரிந்து வந்தாலும், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் முறைப்படி கோயில் கட்டி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
இங்கு புள்ளி மான்கள் விளையாடித் திரிந்ததால் “மான்தோப்பு” என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மாந்தோப்பு ஆனது.
இத்தலத்தில் விநாயகர், வீரபத்திரசாமி, மாயாண்டி, இருளப்பர், இருளாயி, லாடசன்னாசி, சப்தகன்னியர், பேச்சி, காளி, கருப்பர் என 21 பந்தி தெய்வங்களும் அருள்பாலிக்கிறார்கள்.