Tag Archives: திருநல்லூர்
அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோயில், நல்லூர்
அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோயில், நல்லூர், வலங்கைமான் வட்டம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91 93631 41676 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) | |
உற்சவர் | – | கல்யாணசுந்தரேஸ்வரர் | |
அம்மன் | – | கல்யாணசுந்தரி, திரிபுர சுந்தரி, கிரிசுந்தரி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | சப்தசாகரம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருநல்லூர் | |
ஊர் | – | நல்லூர் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சம்பந்தர், அப்பர் |
இமய மலையில் பார்வதியை சிவன் திருமணம் செய்யும் காட்சியைக்காண, உலகில் உள்ள உயிரினங்களும் திரண்டு நின்றன. இதனால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த அகத்தியரை தென் திசைக்கு செல்லும் படி சிவபெருமான் ஆணையிட்டார். தனக்கு திருமணத்தை காணும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என அகத்தியர் வருந்துகிறார். “நான் உனக்கு திருமணக்காட்சி அருள்கிறேன்” என்றார் சிவன். அதன்படி அகத்தியருக்கு இறைவன் இத்தலத்தில் திருமணக்காட்சி காட்டியருளினார். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு இலிங்கத்தை வைத்து பூஜித்து பேறுபெற்றார். அகத்தியர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூல இலிங்கத்தின் பின்புறம் காணலாம்.
பாண்டவர்களின் தாய் குந்திதேவி, பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றாள் என்பதால் அவளுக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க குந்தி தேவி நாரதரிடம் யோசனை கேட்கிறாள். “ஏழு கடல்களில் நீராடினால் தோஷம் நீங்கும்” என நாரதர் கூறினார்.