Tag Archives: திருவானைக்காவல்
அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், திருவானைக்காவல்
அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், திருவானைக்காவல், திருச்சி மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பிரம்மதேவன் தான் செய்து வரும் படைப்புத் தொழிலைப் பெருக்க பத்து புதல்வர்களைப் பெற்றான். அப்புதல்வர்களுள் ஒருவனே தட்சன். இவன் சிவபெருமானைக் குறித்து ஆயிரம் ஆண்டுகள் கடுமையாகத் தவம் புரிந்து ஏராளமான வரங்களைப் பெற்றான். அந்த வரங்களுள் ஒன்று உமா தேவியைத் தனது மகளாக அடைந்து அவளை சிவபெருமானுக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது. அந்த வரத்தின்படி இமய மலைச்சாரலில் காளிந்தி நதியில் வலம்புரிச் சங்கு உருவில் தவம் புரிந்து கொண்டிருந்த உமா தேவியை, தட்சன் கண்டான். அவன் அந்த சங்கினைக் கையில் எடுத்த மறுகணம், சங்கு வடிவம் நீங்கி அழகிய பெண் குழந்தையானாள் உமா தேவி. அவளை எடுத்து வந்து தாட்சாயணி என்ற பெயரைச் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தான் தட்சன். தனது ஆறாவது வயது முதலே சிவபெருமானைத் தனது கணவனாய் அடையும் நோக்குடன் ஊருக்கு வெளியே ஒரு தவமாடத்தை அமைத்து, சிவபெருமானைக் குறித்து கடுமையாக தவம் இருக்கத் தொடங்கினாள் உமாதேவி. அவளது தவத்திற்கு மெச்சிய சிவபெருமான், கூடிய விரைவில் அவளை மணம்புரிவதாய்க் கூறி மறைந்தார். அவர் கூறியது போல் தட்சன் கன்னிகாதான மந்திரங்களைக் கூறி அம்பிகையின் கரத்தை சிவபெருமானின் கரத்தில் வைத்து தத்தம் செய்தான். அடுத்த கணம் சிவபெருமான் திடீரென மறைந்தார்.
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், திருவானைக்காவல்
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், திருவானைக்காவல், திருச்சி மாவட்டம்.
91-431- 2230 257 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5.30- பகல் 1 மணி, மாலை 3- இரவு 8.30 மணி. வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக திறந்திருக்கும். இந்நாட்களில், காலை 6- 6.30, 8- 9, 11- 12.30, மாலை 5 – 6, இரவு 8.30-9 ஆகிய நேரங்களில் மட்டும் சுவாமி, அம்பாள் சன்னதிகள் அலங்காரத்திற்காக அடைக்கப்படும்.
மூலவர் | – | ஜம்புகேஸ்வரர் | |
உற்சவர் | – | சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | அகிலாண்டேஸ்வரி | |
தல விருட்சம் | – | வெண்நாவல் | |
தீர்த்தம் | – | நவ தீர்த்தங்கள் | |
ஆகமம் | – | சைவாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருஆனைக்காவல், திருஆனைக்கா | |
ஊர் | – | திருவானைக்கா | |
மாவட்டம் | – | திருச்சி | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருநாவுக்கரசர் |
சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் இலிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த இலிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் இலிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் “நீர்” தலமானது. பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார். சிவன் அவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார்.
நாவல் மரத்துக்கு “ஜம்பு” என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் இலிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்தததால், சுவாமி “ஜம்புகேஸ்வரர்” எனப் பெயர் பெற்றார்.