Tag Archives: செஞ்சேரி

அருள்மிகு வேலாயுதர் திருக்கோயில், செஞ்சேரி

அருள்மிகு வேலாயுதர் திருக்கோயில், செஞ்சேரி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4255- 266 515, 268 515,268 415

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வேலாயுதர்

உற்சவர்

முத்துக்குமாரர்

தீர்த்தம்

சயிலோதக தீர்த்தம், ஞானதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காணார்சுணை, வள்ளி தீர்த்தம்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

செஞ்சேரி

மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

சூரபத்மன், தான் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினான். அவனை சம்காரம் செய்து தேவகுலத்தைக் காக்க சிவபெருமான் முருகனைப் படைத்தார். முருகனும் அசுரனை அழிக்கக் கிளம்பினார். அப்போது அம்பாளுக்கு சிறுவனான முருகன், சூரனை அழிக்கும் அளவிற்கு திறம் பெற்றவனா?” என்ற சந்தேகம் வந்தது. எனவே அம்பாள் சிவனிடம், “சூரன் போர் புரிவதில் வல்லவன். மாயைகள் செய்யக்கூடியவன். அவனது மாயைகளை சிறுவனான முருகன் வெல்வது எளிதாகுமா?” எனக் கேட்டாள். சிவன் அவளிடம், “முருகன் சூரனை அழிப்பதற்கென்றே அவதரித்தவன். அவன் இல்லாமல் வேறு யாராலும் சூரனை அழிக்க முடியாதுஎன்றார். ஆனாலும் பார்வதிக்கு மனம் கேட்கவில்லை. அவள் முருகன் மீதுள்ள பற்றால் போரில் அவனே வெற்றி பெற மந்திர உபதேசம்செய்யும்படி சிவனிடம் வேண்டினாள். அம்பாளின் வேண்டுதலுக்கு இசைந்த சிவன், முருகனிடம், “நீ போருக்கு செல்லும் வழியில் தர்ப்பை புற்கள் நிறைந்த ஓரிடத்தை காண்பாய். அங்கே ஒரு ஆறு ஓடும். அவ்விடத்தில் மலையின் வடிவில் நான் இருப்பேன். அருகில் உன் தாயார் சக்திகிரிஎன்ற பெயரில் மலையாக இருப்பாள். மேற்கே திருமாலும், கிழக்கே பிரம்மனும் பெரிய பாறை வடிவில் இருப்பர். அங்கே என்னை வேண்டித் தவம் இரு. நான் உனக்கு மந்திர உபதேசம் செய்கிறேன்என்றார். அதன்படி சூரனை சம்காரம் செய்ய சென்ற முருகன் இத்தலத்திற்கு வந்தார். சிவனை வேண்டித் தவம் செய்தார். சிவன் அம்பாளுடன் அவருக்கு காட்சி தந்து, மந்திர உபதேசம் செய்தார். “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லைஎன்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட அவரது ஆலோசனைப்படி சூரனை வென்றார் முருகன். பெற்றோர் பேச்சைக் கேட்கும் பிள்ளைகள் எதிலும் வெற்றியே பெறுவர் என்பதை எடுத்துக்காட்ட தோன்றியது இத்தலம்.