Tag Archives: உத்தமபாளையம்
அருள்மிகு முத்துக்கருப்பண்ணசுவாமி திருக்கோயில், உத்தமபாளையம்
அருள்மிகு முத்துக்கருப்பண்ணசுவாமி திருக்கோயில், உத்தமபாளையம், தேனி மாவட்டம்.
+91- 99409 94548 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். வெள்ளியன்று முழு நேரம் கோயில் திறந்திருக்கும்.
மூலவர் | – | பாறையடி முத்துக்கருப்பணர் (பாறையடி முத்தையா) | |
தீர்த்தம் | – | பாறைடி தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | உத்தமபாளையம் | |
மாவட்டம் | – | தேனி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முற்காலத்தில் இங்குள்ள குன்றின் மீது ஒரு சிவன் கோயில் இருந்தது. இவரது சன்னதி காவலராக முத்துக்கருப்பண சுவாமி எழுந்தருளியிருந்தார். மந்திரவாதி ஒருவன், இந்த சிவனைக் கொண்டு செல்ல முயன்றான். முத்துக்கருப்பணர் அவனைத் தடுத்து வதம் செய்தார். பின்பு நிரந்தரமாக அடிவாரத்திலேயே எழுந்தருளினார். காலப்போக்கில் குன்றின் மீதிருந்த சிவன் கோயில் மறைந்து போனது. பின்னர், முத்துக்கருப்பண்ணரே பிரசித்தி பெற்றுவிட்டார். இவருக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது. பாறையின் அடியில் காட்சி தருவதால் இவர், “பாறையடி முத்தையா” என்று அழைக்கப்படுகிறார்.
மூலஸ்தானத்தில் சுவாமி, நெற்றியில் நாமம், முறுக்கு மீசையுடன் ஆஜானுபாகுவாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஒரு கையில் அரிவாள் இருக்கிறது. இடது காலால் மந்திரவாதியின் மார்பை மிதித்து, அவனது தலையைப் பிடித்திருக்கிறார். சுவாமியின் முகம், மார்பு ஆகியவை நவபாஷாணத்தால் ஆனதாகும். இந்தப் பகுதியில் சுவாமிக்கு அடிக்கடி வியர்க்கும் என்பதால், விசிறியால் வீசி விடுகிறார்கள். அர்த்தஜாம பூஜையின்போது, சுவாமியின் முன்பு நீர் நிரம்பிய பாத்திரத்தை வைத்துவிட்டு நடையை அடைத்து விடுகிறார்கள். இரவில் சுவாமியின் தாகம் தணிப்பதற்கு இவ்வாறு வைப்பதாகச் சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே பிரசாதமாகத் தரப்படுகிறது. காலையில் நடை திறக்கும் முன்பாக அர்ச்சகர், சன்னதி கதவை இரண்டு முறை தட்டிவிட்டு வெளியிலேயே நின்று கொள்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவை தட்டிவிட்டு, அதன்பின்பே சன்னதிக்குள் சென்று சுவாமியை பூஜிக்கிறார். சுவாமியிடம் அனுமதி பெற்றே நடை திறக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். பக்தர்கள் இவரைத் தங்கள் தந்தையாகக் கருதி, “ஐயா” என்று அழைக்கிறார்கள்.
காளாத்தீஸ்வரர் திருக்கோயில், தென்காளஹஸ்தி, உத்தமபாளையம்
அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில், தென்காளஹஸ்தி, உத்தமபாளையம், தேனி மாவட்டம்.
+91- 4554 – 265 419, 93629 93967.
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருக்காளாத்தீஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | ஞானாம்பிகை | |
தல விருட்சம் | – | செண்பகம் | |
தீர்த்தம் | – | உத்தரவாகினி | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | உத்தமபாளையம் | |
மாவட்டம் | – | தேனி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இங்கு முருகனுக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தார். ராணி மங்கம்மாள் ஆட்சியில், இங்கு வசித்த சிவபக்தர் ஒருவர், அவரது படையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்தார். காளஹஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது தீவிர பக்தி கொண்டிருந்த அவர், அடிக்கடி அத்தலத்திற்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்கு வயதானபோது, காளஹஸ்தி செல்ல முடியவில்லை. மனம் வருந்திய அவர், சுவாமியை வழிபட்டார். அப்போது அவருக்கு இத்தலத்தில் காட்சி தந்த காளாத்தீஸ்வரர், அவரது வேண்டுதலுக்காக இங்கேயே இலிங்க ரூபமாக எழுந்தருளினார். சிவன், “காளாத்தீஸ்வரர்” என்றும், தலம் “தென்காளஹஸ்தி” என்றும் பெயர் பெற்றது.