Tag Archives: கொல்லூர்

அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில், கொல்லூர்

அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில், கொல்லூர் -576 220, குந்தாப்பூர் தாலுகா, உடுப்பி மாவட்டம். கர்நாடகா மாநிலம்.

+91- 8254 – 258 245, 094481 77892 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மூகாம்பிகை

தீர்த்தம்: – அக்னி, காசி, சுக்ள, மது, கோவிந்த, அகஸ்தியர், அர்ச்சனை குண்டு

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர்: – கொல்லூர்

மாவட்டம்: – உடுப்பி

மாநிலம்: – கர்நாடகா

பாடியவர் ஆதி சங்கரர்.

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மூகாசுரன் எனும் அசுரன் சிவனை நோக்கி தவமிருந்தான். அவன் தவப்பயனை அடைந்துவிட்டால் உலகிற்குத் துன்பம் ஏற்படும் என்பதால், தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர்.

அம்பிகை, மூகாசுரனின் தவத்தைக்கலைத்து, அவனுடன் போரிட்டாள். அவன் அம்பிகையிடம் சரணடைந்தான். அவனது வேண்டுகோளுக்கிணங்க இத்தலத்தில் அவனது பெயரையே தாங்கி, “மூகாம்பிகைஎன்ற பெயரில் தங்கினாள்.