Tag Archives: மணவாளநல்லூர்
அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர்-விருத்தாசலம்
அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர்–விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.
+91- 4143-230 232, 93621 51949 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
மூலவர் | – | கொளஞ்சியப்பர் | |
தல விருட்சம் | – | கொளஞ்சிமரம் | |
தீர்த்தம் | – | மணிமுத்தாறு | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | மணவாளநல்லூர்–விருத்தாசலம் | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தேவாரம் பாடிய சுந்தரர் திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்) பகுதிக்கு வந்தார். இங்குள்ள பழமலைநாதர் கோயிலில் சிவபெருமான், விருத்தாம்பிகையுடன் அருள் செய்கிறார். “விருத்தம்” என்றால் “பழமை” என்று பொருள். இந்த ஊர், கோயில் எல்லாமே மிகப்பழமை வாய்ந்தவை. பல யுகம் கண்ட கோயில் என்பதால், வாலிப வயதினரான சுந்தரருக்கு இத்தலத்து இறைவனையும், அம்பிகையையும் பாடுவதற்கு தனக்கு தகுதியில்லை எனக்கருதி, அவர்களை வணங்கிவிட்டு, பாடாமல் சென்று விட்டார். சுந்தரரின் பாடல்கள் என்றால் இறைவனுக்கு மிகவும் விருப்பம். அம்பாளுக்கும் அதே விருப்பம் இருந்தது. உடனே சிவன், முருகனை அழைத்தார். முருகன் வேடுவ வடிவம் எடுத்து, சுந்தரரிடம் சென்று, அவரிடமிருந்த பொன்னையும் பொருளையும் அபகரித்தார். இறைப்பணிக்கான பொருளை தன்னிடம் திருப்பித்தந்து விடு என சுந்தரர் வேடுவனிடம் கெஞ்சவே, அதை திருமுதுகுன்றத்தில் வந்து பெற்றுக்கொள்ளும்படி சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.