Tag Archives: திருவகிந்தபுரம்
அருள்மிகு தேவநாதப் பெருமாள் திருக்கோயில், திருவகிந்தபுரம்
அருள்மிகு தேவநாதப் பெருமாள் திருக்கோயில், திருவகிந்தபுரம்-607 401 கடலூர் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தேவநாதர் |
உற்சவர் | – | அச்சுதன் |
தாயார் | – | செங்கமலம் |
தல விருட்சம் | – | வில்வம் |
தீர்த்தம் | – | கருடதீர்த்தம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருவயீந்திரபுரம் |
ஊர் | – | திருவகிந்திபுரம் |
மாவட்டம் | – | கடலூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒரு காலத்தில் அகம்பாவம் பிடித்த தேவர்கள் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டார்கள். அவர்கள் ஒளஷதாசலத்துக்கு வந்து வணங்க, நாரயணன் அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார். அசுரர்கள் பிரம்மனிடம் முறையிட,”பரமனை துணை கொண்டு யுத்தம் செய்யுங்கள்” என்று கூறியனுப்பினார். அசுரர்களுக்கு பக்கபலமாக சிவன் நின்றார். சிவனால் தேவர்கள் தாக்கப்பட்டு அல்லலுறுவதைக் கண்ட நாராயணன் சக்ராயுதத்தை ஏவினார். அசுரர்களை விரட்டிச் சென்று கொன்று குவித்தது. இறுதியில் எல்லோரும் நாராயணனிடம் சரணடைந்தனர். அனைவரையும் பகவான் மன்னித்தார். தாமே மும்மூர்த்தியாகக் காட்சியளிப்பதாகக் கூறிய பகவான், தமது திருமேனியில் பிரமனையும் சிவனையும் காட்டி அனைவரையும் மகிழ்வித்தார். தேவர்களுக்குத் தலைவனாக இருந்தது போரில் வென்றதால் தேவநாதன் என்ற திருநாமம் உண்டாயிற்று. அங்கேயே ஸ்ரீமந் நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேசன், அங்கு ஒரு நகரத்தை உண்டு பண்ணினான். அதுதான் திரு அஹீந்த்ர (ஆதிசேஷ) புரம் என பெயர் பெற்று விளங்கியது.