Tag Archives: கொடிக்குளம்
அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், கொடிக்குளம்
அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், கொடிக்குளம், மதுரை மாவட்டம்.
+91- 452 – 2423 444, 98420 24866 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 10 – 10.30 மணி. பிற நேரங்களில் தரிசிக்க கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு செல்ல வேண்டும்.
மூலவர் |
– |
|
வேதநாராயணன் |
தீர்த்தம் |
– |
|
பிரம்ம தீர்த்தம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் |
– |
|
ஜோதிஷ்குடி |
ஊர் |
– |
|
கொடிக்குளம் |
மாவட்டம் |
– |
|
மதுரை |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்னும் இரு அசுரர்கள் வேதங்களை எடுத்துச் சென்றனர். இதனால் படைப்புத்தொழில் நின்றது. மகாவிஷ்ணு அசுரர்களை வதம் செய்து, வேதங்களை மீட்டு வந்தார். ஆனால், பிரம்மாவிடம் கொடுக்கவில்லை. விஷ்ணுவிடம் வேதங்களை பெற்று, மீண்டும் படைப்புத்தொழில் செய்ய, பிரம்மா இத்தலத்தில் மனித வடிவில் தவமிருந்தார். பெருமாள் அவருக்கு ஹயக்ரீவ மூர்த்தியாகக் காட்சி தந்து வேதங்களைத் திருப்பி தந்தார். அப்போது பிரம்மா பெருமாளிடம், சுயரூபத்தில் தரிசனம் தரும்படி வேண்டவே அவர் நாராயணராக காட்சி தந்தருளினார். எனவே, “வேதநாராயணன்” என்றும் பெயர் பெற்றார்.
ஸ்ரீரங்கம் தலைமை பீடப் பொறுப்பில் நம்பிள்ளை என்ற மகான் இருந்தார். “லோகாச்சாரியார்” என்ற பட்டம் பெற்ற அவரது சீடரான, வள்ளல் வடக்குத்திருவீதிப்பிள்ளை, பெருமாளின் தீவிர பக்தர். இவருக்கு 1205, ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில், பெருமாளின் அம்சமாக ஆண்குழந்தைபிறந்தது. குழந்தைக்கு தன் குருவின் பெயரைச் சேர்த்து “பிள்ளை லோகாச்சாரியார்” எனப் பெயரிட்டார். கற்றுத்தேர்ந்த லோகாச்சாரியார், பெருமாள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1323ல், ஸ்ரீரங்கம் கோயிலை சேதப்படுத்த அந்நியர்கள் வந்தனர். அப்போது பிள்ளை லோகாச்சாரியாருக்கு வயது 118. தள்ளாத வயதிலும் உற்சவர் அழகிய மணவாளனைக் காக்க நினைத்த அவர் மூலவர் சன்னதியை மறைத்து சுவர் எழுப்பி, முன்பகுதியில் வேறு ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிட்டு, தாயார்களுடன் உற்சவரை மூடு பல்லக்கில் வைத்து சீடர்களுடன் தெற்கே கிளம்பினார். பல துன்பங்களுக்கிடையில் கொடிக்குளம் வந்தார். வேதநாராயணரை வழிபட்ட அவர், கோயிலின் பின்புறமுள்ள குகையில் அழகிய மணவாளரை மறைத்து வைத்து பூஜை செய்தார்.