Tag Archives: விட்டலாபுரம்

அருள்மிகு பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில், ச்

அருள்மிகு பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில், விட்டலாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

+91-4630-263 538 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பாண்டுரங்க விட்டலேஸ்வரர்

தாயார்

பாமா, ருக்மணி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

விட்டலாபுரம்

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் தமிழகப் பிரதிநிதியாக விட்டலராயன் என்ற விட்டல தேவன் ஆட்சி செய்தார். இவருக்கு பண்டரிபுரம் பாண்டுரங்கன் மீது அதிக ஈடுபாடு இருந்தது. இவரது கனவில் பாண்டுரங்கன் தோன்றி வடக்கில் இருப்பது போல தென்னகத்தில் உனது இருப்பிடத்திலும் அருள்பாலிக்க உள்ளேன். எனவே தாமிரபரணி ஆற்றில் புதைந்து கிடக்கும் எனது விக்ரகத்தை எடுத்து கோயில் கட்டி வழிபடுஎனக் கூறி மறைந்தார். பாண்டுரங்கன் கூறியது போலவே ஆற்றிலிருந்து விக்ரகம் எடுக்கப்பட்டது. ஆற்றிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் தன் பெயரால் விட்டலாபுரம் என்ற நகரை உருவாக்கி, நகரின் நடுவே கோயில் கட்டி விக்ரகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இவரது திருப்பணியில் மகிழ்ந்த பாண்டுரங்கன் இவர் முன் தோன்றி வேண்டிய வரம் கேள்என்றார். விட்டலராயனும்,”பெருமாளே. தங்கள் சன்னதியை நாடி வரும் பக்தர்களின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பெருக வேண்டும். உனது சன்னதிக்கு வந்து பாடி நிற்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களை தந்தருள வேண்டும்என வேண்டினார். தன்னலமற்ற இந்த வேண்டுதலை ஏற்ற பெருமாள், அன்றிலிருந்து இத்தலத்தில் கேட்டவருக்கு கேட்டவரம் தந்து அருள்பாலித்து வருகிறார்.