Tag Archives: விரிஞ்சிபுரம்
மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம்
அருள்மிகு மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம், வேலூர்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மார்க்கபந்தீசுவரர் | |
அம்மன் | – | மரகதாம்பிகை | |
தல விருட்சம் | – | பனைமரம் | |
தீர்த்தம் | – | சிம்ம தீர்த்தம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவிரிஞ்சி | |
ஊர் | – | விரிஞ்சிபுரம் | |
மாவட்டம் | – | வேலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
திருவண்ணாமலையில் ஈசனின் முடி காண முடியாமல் ஈசனாரின் திருமுடியில் இருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு ஈசனாரின் முடி கண்டதாகக் கூறி அதனால் அவதியுற்ற பிரம்மா, தேவரூபத்தில் காட்சி தரக்கூடாது என்று ஈசன் கருதியதால், விரிஞ்சிபுரத்தில் உள்ள இக்கோயில் குருக்கள் மகனாக பிறந்து சிவசர்மன் என்ற பெயரோடு வளர்ந்தான்.