Tag Archives: திருநாராயணபுரம்
அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருநாராயணபுரம்
அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருநாராயணபுரம் – 621 203. திருச்சி மாவட்டம்.
+91- 99766 11898 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வேதநாராயணப்பெருமாள் |
உற்சவர் | – | |
தாயார் | – | வேதநாயகி |
தல விருட்சம் | – | வில்வம் |
தீர்த்தம் | – | காவிரி |
ஆகமம்/பூசை | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | வேதபுரி |
ஊர் | – | திருநாராயணபுரம் |
மாவட்டம் | – | திருச்சி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கர்வத்தால் பதவி இழந்து, மீண்டும் படைக்கும் பொறுப்பேற்ற பிரம்மா, தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு வேதத்தை உபதேசித்த பெருமாள், இங்கேயே பள்ளி கொண்டார். சுவாமிக்கு “வேதநாராயணர்” என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் சுவாமி சிலை மண்ணால் மூடப்பட்டது. வானவராயர் என்ற மன்னர், ஒருமுறை இவ்வூர் வந்து தங்கினார். அவரது கனவில் தோன்றிய சுவாமி, தனது சிலை மண்ணில் புதைந்திருப்பதைக் கூறினார். சிலையைக் கண்டெடுத்த மன்னர், கோயில் எழுப்பினார்.