Tag Archives: திருமணிக்கூடம்
அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயில், திருமணிக்கூடம்
அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயில், திருமணிக்கூடம்– 609 106 நாகப்பட்டினம் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்) |
தாயார் | – | திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி) |
தீர்த்தம் | – | சந்திர புஷ்கரிணி |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | திருமணிக்கூடம் |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன்,”உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்” எனச் சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேயத் தொடங்கினான். சாபம் தீர ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு என ஒவ்வொரு கோயிலாகச் சென்று கடைசியில் திருமணிக்கூடத்திற்கு வந்தான். அங்கே அவனுக்கு பெருமாள் வரம் தந்து வரதராஜனாகக் காட்சி தந்தார். அவனது நோய் விலகியது. சாபவிமோசனம் கிடைத்தது.