Tag Archives: திருப்பதி சாரம்
அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருப்பதி சாரம்
அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருப்பதி சாரம் – 629 901, நாகர் கோவில் கன்னியாகுமரி மாவட்டம்.
+91-94424 27710 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருவாழ்மார்பன் |
உற்சவர் | – | ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசன் |
தாயார் | – | கமல வல்லி நாச்சியார்,சுவாமி மார்பில் மகாலட்சுமி |
தீர்த்தம் | – | லட்சுமி தீர்த்தம் என்ற புஷ்கரிணி |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருவண்பரிசாரம் |
ஊர் | – | திருப்பதிசாரம் |
மாவட்டம் | – | கன்னியாகுமரி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒரு காலத்தில் சுசீந்திரம், ஞானாரண்யம் என அழைக்கப்பட்டது. சப்தரிஷிகள் இங்கு தவமிருந்தனர். இறைவன் சிவவடிவில் அவர்களுக்குக் காட்சி தந்தார். முனிவர்கள் இறைவனைத் திருமாலின் உருவிலேயே காண, சோம தீர்த்தக் கட்டம் என்ற இடத்திற்கு சென்று தவம் செய்தனர். அவர்களது தவத்துக்கு இரங்கிய இறைவன், திருமாலின் உருவில் காட்சி தந்தார். அவ்வுருவில் அங்கு தங்கியருள வேண்டும் என்ற முனிவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற, திருமால், சப்தரிஷிகள் சூழ, பிரசன்ன மூர்த்தியாக சுமர்ந்து அருள்புரிகின்றார் என்பர்.