Tag Archives: திருமழிசை

அருள்மிகு ஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயில், திருமழிசை

அருள்மிகு ஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம்.

+91- 44 – 2681 0542 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஜெகந்நாதப்பெருமாள்

தாயார்

திருமங்கைவல்லி

தல விருட்சம்

பாரிஜாதம்

தீர்த்தம்

பிருகு புஷ்கரணி

ஆகமம்

வைகானஸம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

ஊர்

திருமழிசை

மாவட்டம்

திருவள்ளூர்

மாநிலம்

தமிழ்நாடு

அத்திரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவர் ஆகிய பிரம்மரிஷிகள் பிரம்மனிடம் சென்று பூலோகத்தில் தாங்கள் தவம் செய்ய விரும்புவதாகவும், அதற்குத் தகுந்த இடத்தை காட்டுமாறும் வேண்டினர். பிரம்மன், தேவசிற்பியை அழைத்து ஒரு தராசைக் கொடுத்து அதன் ஒரு பக்கத்தில் திருமழிசை தலத்தையும், மறுபக்கத்தில் பூமியில் உள்ள பிற புண்ணியதலங்களையும் வைத்தார். அப்போது, திருமழிசைத்தலம் இருந்த தட்டு கனமாக கீழே இழுத்தபடியும், பிற தலங்கள் இருந்த தட்டு மேலெழும்பியும் இருந்தது. இக்காட்சியைக்கண்டு வியந்த பிரம்மரிஷிகள் திருமழிசைத்தலத்தின் மேன்மையை அறிந்து, பிரம்மனிடம் ஆசி பெற்று இங்கு வந்து தவமிருந்தனர். அவர்களுக்கு பெருமாள், அமர்ந்த கோலத்தில் ஜெகந்நாதராக காட்சி தந்தருளினார்.

ஒருமுறை பரமசிவனும், பார்வதியும் ஆகாயத்தில் ரிடப வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, யோகத்தில் இருந்த திருமழிசை ஆழ்வாரைக்கண்ட பார்வதி, சிவனிடம் கூறி ஆழ்வாருடன் வார்த்தை விளையாடக் கூறினார். அதன்படி சிவன் ஆழ்வாரிடம் பேச, முடிவில் அவர்களுக்கிடையேயான பேச்சு வாதத்தில் முடிந்தது. ஆழ்வாரின் சொல்வன்மையை கண்டு வியந்த சிவன் அவருக்கு, “பக்திசாரர்என சிறப்புப் பெயர் சூட்டினார். சைவம் மற்றும் வைணவம் என இரு மதத்திலும் ஈடுபட்டு பாடல்கள் இயற்றிய இவர் நான்காம் ஆழ்வார் ஆவார். கால் கட்டைவிரல் நகத்தில் ஞானக்கண்ணைப்பெற்ற இவர் அவதரித்த இத்தலத்தில் இவருக்கு தனிச்சன்னதி உள்ளது.

ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை

அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம்.

+91-9841557775

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஒத்தாண்டேஸ்வரர்
அம்மன் குளிர்வித்த நாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் தெப்பம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருமழிசை
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

கரிகால் பெருவளத்தான், இத்தலத்திற்கு அருகிலுள்ள மற்றொரு தலத்தில் சிவனை வழிபடுவதற்காக தனது யானையில் சென்றான். அப்போது யானையின் கால் ஒரு கொடியில் சிக்கிக்கொண்டது. கையால் அதனைக் களைய முயன்று முடியவில்லை. எனவே, தனது உடைவாளைக்கொண்டு அக்கொடிகளை வெட்டினான். அடியிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சியடைந்த மன்னன், கொடிகளை விலக்கி பார்த்தபோது உள்ளே ஒரு இலிங்கம் இருந்தது. பதறிப் போன மன்னன், இலிங்கத்தை வெட்டிய அதே வாளைக்கொண்டு, சிவபாவம் செய்த தனது வலக்கையை வெட்டி வீசினான். அவனது பக்தியில் மெச்சிய சிவன், அம்பாளுடன் ரிஷபவாகனத்தில் காட்சி தந்து, இழந்த கையை மீண்டும் உடலுடன் பொருத்தினார். எனவே இவரை கைதந்தபிரான்என்று அழைக்கிறார்கள். மன்னனுக்கு ஆறுதல் மொழி சொல்லியும், சிவனுக்கு அவரது அடியார்களின் கதையைச்சொல்லியும் அவர்களின் மனதை அம்பிகை குளிர்வித்தாள். எனவே இவள் குளிர்வித்த நாயகிஎன்றழைக்கப்படுகிறாள்.