Tag Archives: சின்னமனூர்
அருள்மிகு இலட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், சின்னமனூர்
அருள்மிகு இலட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், சின்னமனூர், தேனி மாவட்டம்.
+91- 4554 – 247 486, 247 134 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
இலட்சுமிநாராயணர் |
|
தாயார் |
– |
ஸ்ரீதேவி, பூதேவி |
|
தல விருட்சம் |
– |
மகிழம் |
|
தீர்த்தம் |
– |
சுரபி நதி |
|
ஆகமம் |
– |
பாஞ்சராத்ரம் |
|
பழமை |
– |
500 வருடங்களுக்கு முன் |
|
புராணப் பெயர் |
– |
அரிகேசவநல்லூர் |
|
ஊர் |
– |
சின்னமனூர் |
|
மாவட்டம் |
– |
தேனி |
|
மாநிலம் |
– |
தமிழ்நாடு |
முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த பெருமாள் பக்தர்கள், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் அமைப்பில் இங்கு சுரபி நதிக்கரையில் சிலை வடித்துக் கோயில் எழுப்பினர். அந்நியர் படையெடுப்பின்போது, கோயில் சேதமடைந்தது. பின்பு இப்பகுதியை சேர மன்னர்கள் ஆண்டு வந்தனர். அப்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் மன்னர் கனவில் தோன்றிய பெருமாள், தனது இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டி இங்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்பின்பு இங்கு குருவாயூரப்பன் அமைப்பில் சுவாமிக்கு சிலை வடித்த மன்னர், தாயார்களுடன் பிரதிஷ்டை செய்தார். குருவாயூரில் சின்னக்கண்ணனாக காட்சி தரும் பெருமாள் இங்கு, தாயார்களுடன் காட்சி தருவது விசேஷமான தரிசனம். பொதுவாக மகாலட்சுமி தாயாருடன் மட்டும் காட்சி தரும் மூர்த்தியே, “லட்சுமி நாராயணர்” என்ற பெயரில் அழைக்கப்படுவார். ஆனால், இங்கு சுவாமியின் மார்பிலுள்ள மகாலட்சுமி பிரதான தாயாராக கருதப்படுவதால், சுவாமிக்கு இப்பெயரே அமைந்துவிட்டது.
கருவறையில் லட்சுமிநாராயணர், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். பல்லாண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு சன்னதி அமைக்க முற்பட்டனர். அதற்காக சிலை வடித்து, சன்னதியும் எழுப்பப்பட்டது. சன்னதியில் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்யும் முன்பாக, பக்தர் ஒருவர் மூலமாக அசரீரியாக ஒலித்த பெருமாள், தன் பக்தனான ஆஞ்சநேயரை தனக்கு அருகில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினார். அதன்படி ஆஞ்சநேயர் சிலையை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். தற்போதும் ஆஞ்சநேயரை, மூலஸ்தானத்தில் சுவாமிக்கு அருகில் தரிசிக்கலாம். இவர் சுவாமியின் பாதத்தைவிட, உயரம் குறைவானவராக காட்சி தருவது விசேஷம். இவருக்காக அமைக்கப்பட்ட சன்னதி, பிரகாரத்தில்இருக்கிறது. அனுமன் ஜெயந்தியன்று இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் இவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுவது விசேஷம்.
அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில், சின்னமனூர்
அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில், சின்னமனூர், தேனி மாவட்டம்.
+91- 4554-249 480 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மாணிக்கவாசகர் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | சின்னமனூர் | |
மாவட்டம் | – | தேனி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் வசித்த சம்புபாதசிரியர், சிவஞானவதி தம்பதியரின் மகன் வாதவூரார். அவரை, மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் தனது அமைச்சராக்கி, “தென்னவன் பிரமராயன்” என்று பட்டம் சூட்டினான். அவரிடம் பொன்னும், பொருளும் கொடுத்து தனது படைக்கு குதிரைகள் வாங்கிவரும்படி அனுப்பினான்.
அவர் திருப்பெருந்துறை (ஆவுடையார்கோவில்) தலத்தை அடைந்தபோது, ஒரு குருந்த மரத்தின் அடியில் சிவபெருமான், குருவாக இருந்து சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரைக்கண்ட வாதவூரார் தன்னையறியாமல் அவருடன் ஒன்றி, திருவடியில் விழுந்து தன்னையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.
சிவனும் அவருக்கு உபதேசம் செய்தார். மகிழ்ந்த மாணிக்கவாசகர் அவரைப் பற்றி பாடினார். அந்த பதிகங்களின் வாசகங்கள் மாணிக்கம் போல இருந்ததால் சிவன் அவருக்கு “மாணிக்கவாசகர்” என பெயர் சூட்டினார். தன்னை சிவனிடமே ஒப்படைத்த மாணிக்கவாசகர், மன்னன் அழைப்பை ஏற்று நாடு திரும்பினார். அவருக்காக சிவன் நரிகளை குதிரைகளாக மாற்றி, திருவிளையாடல் செய்து, அவற்றை மன்னனிடம் ஒப்படைத்தார். மீண்டும் அவை நரிகளாக மாறவே, மாணிக்கவாசகரைத் தண்டித்தான் மன்னன். சிவன், அவரை விடுவிக்கத் திருவிளையாடல் செய்து, தனது பக்தனின் பெருமையை ஊரறியச் செய்தார். இப்படி புகழ் பெற்ற மாணிக்கவாசகர் இங்கு மூலவராக அருளுகிறார்.