Tag Archives: கரைவீரம்
அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், கரைவீரம்
அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், கரைவீரம், திருக்கண்ணமங்கை போஸ்ட், திருவாரூர் மாவட்டம்.
+91- 4366 – 241 978 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கரவீரநாதர் ( பிரம்மபுரீஸ்வரர்) | |
அம்மன் | – | பிரத்தியட்சமின்னம்மை | |
தல விருட்சம் | – | செவ்வரளி, அலரி | |
தீர்த்தம் | – | அனவரத தீர்த்தம் | |
ஆகமம் | – | காரண ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கரவீரம் | |
ஊர் | – | கரைவீரம் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
முன்னொரு காலத்தில் தேவகன்னியர்கள் கைலாயத்தில் சிவனையும் சக்தியையும் தரிசிக்க சென்றனர். அப்போது அவர்கள் பார்வதியிடம்,”தேவி! தங்களுக்கு சிவபெருமான் கணவனாக உள்ளார். குழந்தைகளும் உள்ளது. எங்களுக்கும் திருமண பாக்கியம் தந்தருள வேண்டும்” என வேண்டினர். அதற்கு பார்வதி தேவி சிவனிடம்,”இறைவா, இதற்கு தாங்கள் தான் பதில் கூறவேண்டும்” என வேண்டினாள். உடனே சிவபெருமான் காவிரியின் தென்கரையில் தானே இலிங்கம் அமைத்துக் கொடுத்து, அதை அமாவாசை தினத்தில் தேவகன்னியரை வழிபாடு செய்யக் கூறினார். தேவகன்னியரும் அதன்படி செய்து பலனடைந்தனர் என தலபுராணம் கூறுகிறது. எனவே அமாவாசை நாட்களில் பெண்கள் இங்கு வந்து, இங்குள்ள தலவிருட்சத்தில் தண்ணீர் ஊற்றி, சிவனை வழிபாடு செய்கின்றனர்.