Tag Archives: பனையபுரம்
பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம்
அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம், முண்டியம்பாக்கம், விழுப்புரம் மாவட்டம்.
+91-99420 56781
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பனங்காட்டீஸ்வரர் | |
அம்மன் | – | சத்யாம்பிகை, புறவம்மை | |
தல விருட்சம் | – | பனைமரம் | |
தீர்த்தம் | – | பத்ம தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருப்புறவார் பனங் காட்டூர் | |
ஊர் | – | பனையபுரம் | |
மாவட்டம் | – | விழுப்புரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
சிவபெருமானை நிந்தித்து, தக்கன் செயத வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று, தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தான்.
தான் செய்த தவறுக்கு வருந்தி சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றார். சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூரும் ஒன்றாகும்.
சிபிச்சக்ரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காத்தற்காகத் தன் கண்களைப் பறித்தளிக்க, இறைவன் அம்மன்னனின் கடமை உணர்வை அறிந்து காட்சிதந்து இழந்த கண்களை மீண்டும் அருளினார். அதனால் இத்தலத்து இறைவனுக்கு “கண்பறித்து அருளிய கடவுள்” எனப் பெயர் ஏற்பட்டது.
வெளிப்பிரகாரத்தில் விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் தலமரமாகிய பனைமரங்கள் மூன்று உள்ளன. அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. நின்ற திருக்கோலம்.