Tag Archives: வத்திராயிருப்பு

அருள்மிகு அழகிய சாந்த மணவாளப் பெருமாள் திருக்கோயில், அர்ஜுனாபுரம், வத்திராயிருப்பு

அருள்மிகு அழகிய சாந்த மணவாளப் பெருமாள் திருக்கோயில், அர்ஜுனாபுரம், வத்திராயிருப்பு, விருதுநகர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

அழகிய சாந்த மணவாளப்பெருமாள்

உற்சவர்

அழகிய சாந்த மணவாளப்பெருமாள்

தாயார்

பத்மாவதி தாயார்

தல விருட்சம்

உறங்காப்புளி

தீர்த்தம்

இறங்காக்கிணறு

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

தர்மாரண்ய க்ஷேத்திரம்

ஊர்

வத்திராயிருப்பு

மாவட்டம்

விருதுநகர்

மாநிலம்

தமிழ்நாடு

வத்திராயிருப்பு பகுதியை புராணகாலத்தில் தர்மாரண்ய க்ஷேத்திரம் என்று அழைத்தனர். இங்குள்ள மலைப்பகுதி தர்மாத்ரிஎன்று குறிக்கப்படுகிறது. அர்ஜுனன் தீர்த்தயாத்திரை செய்தபோது, இப்பகுதிமக்கள் வறட்சியால் நீரின்றி தவித்ததைக் கண்டு வருந்தினார். உடனே, தன் வில்லை எடுத்து பூமியை நோக்கி அம்பு தொடுத்தார். அந்த இடத்தில் அழகிய பொய்கை உருவானது. அப்பொய்கை அர்ஜுனப் பொய்கை என்றும், அங்கிருந்து உற்பத்தியான நதி அர்ஜுனாநதிஎன்றும் பெயர் பெற்றது. ரிஷிகளிடம் ஸ்ரீதேவியான லட்சுமி தாயார், “பூலோகத்தில் தவம் செய்வதற்கு சிறந்த இடம் எது?” என்று கேட்டாள். அவர்கள் இத்தலத்தைப் பற்றி சொன்னதும், அங்கு வந்தாள். இடத்தைப் பார்த்தவுடனேயே அவள் முகம் மலர்ந்தது. “லட்சுமி முகம் மலர்ந்த இடம்என்பதால் “”ஸ்ரீவக்தரம்” (திருமகள் திருமுகம்) என்னும் பொருளில் இத்தலம் அழைக்கப்பட்டுவந்தது. பின்னாளில் ஸ்ரீ வக்த்ரபுரம்என்றாகி வத்திராயிருப்பு என்று மருவியதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீதேவி தாயார் இவ்வூரில் தவம் செய்து, திருத்தங்கல் என்னும் திருத்தலத்தில் மகாவிஷ்ணுவை திருமணம் செய்ததாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.

அருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில், வத்திராயிருப்பு

அருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்மாவட்டம்.
***********************************************************************************

மூலவர் நல்லதங்காள்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் வத்திராயிருப்பு
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

வத்திராயிருப்பைச் சேர்ந்தவள் நல்ல தங்காள். இவளுக்கு நல்லதம்பி என்ற அண்ணன் ஒருவர் உண்டு. பண்பாடு மிக்க, பெரும் விவசாயக் குடும்பத்தில் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நல்லதங்காளை, மதுரையைச் சேர்ந்த காசிராஜன் என்பருக்கு திருமணம் செய்து வைத்தனர். நல்ல தங்காள் ஏழு குழந்தைகளுக்கு தாயானாள்.

இந்நிலையில் மதுரையைப் பஞ்சம் வாட்டியது. வறுமையைப் போக்க, தன் ஏழு பிள்ளைகளுடன் அண்ணன் நல்லதம்பியை நாடி வத்திராயிருப்புக்கு வந்தாள். அப்போது அண்ணன் வீட்டிலில்லை. அண்ணி அவளைக் கண்டு கொள்ளவில்லை.

பசியால் வந்த நல்ல தங்காளையும், அவள் குழந்தைகளையும் ஆதரிக்காமல், ஓட்டை மண்பானையையும், பச்சை விறகையும், பயன்படுத்த முடியாத கோப்பையையும் கொடுத்து உணவாக்கி உண்ணச் சென்னாள்.

பத்தினி தெய்வத்தன்மை படைத்த நல்ல தங்காள் பார்த்த உடனே பச்சை விறகு தீப்பற்றி எரிந்தது. உணவு சமைத்து, தானும் பிள்ளைகளும் உண்டு அரைப்பசியை தடுத்தனர். அண்ணன் வருவான் என்று எதிர் பார்த்தாள். நாட்கள் சில கடந்தன. பசி வாட்டியது. பிள்ளைகள் வாடின. அண்ணன் தன் நிலையைப் பார்த்து துடிப்பான்; அண்ணியின் இரக்கமற்ற தன்மையைக் கேட்டால் கொதிப்பான்; எனவே தானும், குழந்தைகளும், மாய்வதே சிறப்பு என்று நினைத்து அவசர முடிவெடுத்து, பாழும் கிணற்றில் ஏழு குழந்தைகளையும் தூக்கி எறிந்து தானும் குதித்து மூழ்கினாள்.