Tag Archives: மண்ணச்சநல்லூர்
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், மண்ணச்சநல்லூர்
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், மண்ணச்சநல்லூர், திருச்சி மாவட்டம்.
+91 93447-69294 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
பூமிநாதர் |
தாயார் |
– |
|
அறம்வளர்த்த நாயகி |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
மண்ணச்சநல்லூர் |
மாவட்டம் |
– |
|
திருச்சி |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
அந்தகன் என்னும் அசுரன் தேவலோகம் சென்று இந்திராதிதேவர்களைத் தொல்லைப்படுத்தி வந்தான். தேவர்கள் யாவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். மகாதேவனான சிவபெருமானின் உதவியை நாடினர். சிவபெருமானும் தேவர்களுக்கு உதவிட முன்வந்தார். கோபக்கனல் கொண்டு உக்கிரத்துடன் எழுந்தார். அந்தகாசுரனை சூலத்தால் கொன்று அழித்தார். அப்போது சிவபெருமானின் நெற்றியிலிருந்து, பூமியில் விழுந்த வியர்வைத் துளியில் இருந்து பூதம் ஒன்று தோன்றியது. அது தன் பசியைத் தணித்துக் கொள்ள யுத்த பூமியில் வீழ்ந்து கிடந்த உடல்களைத் தின்றது. பசி தணியாததால் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தது. சிவபெருமான் பூதம் முன் தோன்றி, வேண்டிய வரம் கேள் எனக் கூறினார். மூன்று உலகங்களையும் எரித்து அழிக்கும் திறன் வேண்டும், என கேட்டது. சிவபெருமானும், சில காரணங்களால் அந்த வரத்தை அளித்தார். பூதம் முதலில் பூமியை விழுங்க முற்பட்டது. தேவர்கள் அதனைத் தடுத்து, பூமியில் குப்புறத் தள்ளி, பூதத்தை அழுத்திப்பிடித்து எழ முடியாதபடி செய்தனர். கவிழ்ந்த தலையுடன் பூமியில் குப்புறப்படுத்த நிலையில் உள்ள பூதம், தேவர்களிடம் “எனக்கு பசிக்கிறது. நீங்கள் அழுத்திப் பிடித்துள்ளதால் என்னால் உணவு தேடிப்போக முடியாது. நீங்களே உணவளியுங்கள்” என்றது. “பூதமே. பூலோகமக்கள் வீடு, கட்டடம் கட்டும்முன், மனைப் பகுதியில் செய்யும் பூஜையில் வழங்கும் பொருள்களும், விதிமுறையின்றி செய்யப்படும் யாகங்களில் வழங்கப்படும் பொருள்களும் உனக்கு உணவாகட்டும்.