Tag Archives: இராமநாதபுரம்
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், இராமநாதபுரம்
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், இராமநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டம்.
+91- 4567- 222 155, 224 140, +91- 94432 35170
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஐயப்பன் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | இராமநாதபுரம் | |
மாவட்டம் | – | இராமநாதபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சபரிமலையைப் போல, இக்கோயிலில் ஐயப்பன் உயர்ந்த இடத்திலுள்ள மூலஸ்தானத்தில் பாலகனாக அருளுகிறார். பஞ்சலோக மூர்த்தியான இவரது சிலை கேரளத்தில் செய்யப் பட்டதாகும்.
சுவாமிக்கு வலப்புறம் உள்ள துவாரபாலகர், தனது ஒரு விரலை மட்டும் காட்டி “இறைவன் ஒருவனே” என்ற தத்துவத்தையும், “மனதை அலைபாயவிடாமல் ஐயப்ப சுவாமியை ஒரு மனதாக வணங்கு” என்றும் உணர்த்துகிறார். இடப்புறத்தில் உள்ள துவாரபாலகர், சுவாமியின் பக்கம் தனது கையை திருப்பிக்காட்டி, “இறைவனான இவரை வணங்கு” எனக் காட்டுகிறார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கும் நாட்களில் மட்டுமே இங்கும் நடைதிறக்கப்படும். விசேஷம் முடிந்து, நடை அடைக்கும்போது சுவாமிக்கு விபூதி அலங்காரம் செய்து, இடது கையில் தண்டம் வைத்து, ஒரு தீபத்தை ஏற்றுகிறார்கள். ஐயப்பன் தவ நிலையில் இருப்பவர் என்பதால் இந்த ஏற்பாடு. மீண்டும் நடை திறக்கும்போது விபூதி அலங்காரத்தைக் கலைத்து, அதையே பிரசாதமாக தருகின்றனர்.
அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில், இராமநாதபுரம்
அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில், இராமநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டம்.
+91-98948 87503 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
முருகன் |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | இராமநாதபுரம் | |
மாவட்டம் | – | இராமநாதபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தற்போது கோயில் உள்ள இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அரசமரம் இருந்தது. மரத்தின் கீழ் ஒரு சிறிய வேல் நடப்பட்டு அதற்கு பூஜை செய்யப்பட்டு வந்தது. அருகிலேயே கோர்ட் இருந்ததால் விசாரணைக்காக வருபவர்கள், வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிச் செல்வார்கள். சொத்து வழக்குகளில் சிக்கி, வாழ வழியற்று நிற்பவர்கள், கிரிமினல் வழக்குகளில் சிக்கிய நிரபராதிகள் எல்லாம் இந்த முருகனை வணங்கி வாழ வழிபெற்றனர். எனவே வழிவிடும் முருகன் என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டது. இவரை வந்து வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்க்கை முழுவதும் துணை வருவதாகவும் நம்பிக்கை உள்ளது.
பொதுவாக கோயில்களில் நுழைந்தவுடன் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் இருப்பார்கள். விநாயகரை முதலில் வணங்கி விட்டு கோயிலுக்குள் சென்று திரும்பி வரும் போது முருகனை வணங்குவது போன்ற அமைப்பு இருக்கும். ஆனால், இங்கே கர்ப்பகிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து அருள்பாலிப்பது மிக மிக சிறப்பு. இத்தகைய படைப்பை மிக அரிதாகவே காண இயலும்.