Tag Archives: திருச்சென்னம்பூண்டி
சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருக்கோயில், திருச்சென்னம்பூண்டி
அருள்மிகு சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருக்கோயில், திருச்சென்னம்பூண்டி, (கோயிலடி அருகில்) திருவாரூர் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
திருக்கடையுடைய மகாதேவர் |
அம்மன் |
– |
|
சித்தாம்பிகா |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
திருச்சென்னம்பூண்டி |
மாவட்டம் |
– |
|
திருவாரூர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
சிவலிங்க வடிவில் உள்ள இறைவனின் திருமேனி முழுவதும் சடை வடிவங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதனால் தான் இவர் சடையார் என்ற காரணப் பெயருடன் அழைக்கப்படுகிறார் என தலவரலாறு கூறுகிறது. திருக்கடைமுடி மகாதேவர் கோயில் என முன்பு அழைக்கப்பட்ட இந்த ஆலயம் தற்போது சடையார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் மாதிரியான ஆலயம் இது எனச் சொல்லப்படுகிறது.
இங்கு அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் திருக்கடையுடைய மகாதேவர். அம்மனின் பெயர் சித்தாம்பிகா. இவளது சன்னதி தென்திசை நோக்கி தனியாக அமைந்துள்ளது. அம்மன் தனது மேல் வலது கரத்தில் சங்கு, மேல் இடது கரத்தில் கதை தாங்கி அருள்புரிகிறாள். முன்னிரு கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடன் திகழ்கிறாள். இறைவனின் சன்னதி கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவன் சன்னதியின் முன் நந்தி அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். இங்கு 21 கல்வெட்டுகளை தொல்பொருள் துறை கண்டுபிடித்துள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இதன் மூலம் இக்கோயிலுக்கு பொன் அளித்தோர் பற்றிய தகவல்களை அறிய முடிகிறது. இறைவன் சன்னதி முழுவதும் கருங்கற்களாலேயே அமைக்கப்பட்டுள்ளது.