Tag Archives: கோட்டூர்
அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர்
அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம்.
+91- 4367 – 279 781, 97861 51763 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கொழுந்தீஸ்வரர் (அக்ர பரமேஸ்வரர்) | |
அம்மன் | – | தேனார் மொழியம்மை (தேனாம்பிகை என்ற மதுர பாஷிணி) | |
தல விருட்சம் | – | வன்னி | |
தீர்த்தம் | – | முள்ளியாறு, சிவகங்கை, பிரம, சிவ, மண்டை, அமுத, இந்திர, விசுவகன்ம, அரம்பா என 9 வகை தீர்த்தங்கள் | |
ஆகமம் | – | காமிய ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | இந்திரபுரம், மேலக்கோட்டூர் கோயில், திருக்கோட்டூர் | |
ஊர் | – | கோட்டூர் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞான சம்பந்தர் |
விருத்திராசுரன் என்ற அரக்கன் தேவர்களை மிகவும் துன்புறுத்தினான். இதனால் வருத்தமடைந்த இந்திரன் பிரம்மனிடம் முறையிட்டான். அதற்கு பிரம்மா, “இந்திரனே! ததீசி என்ற முனிவரின் முதுகெலும்பை பெற்று, அதை வஜ்ராயுதமாக்கி அதன் மூலம் மட்டுமே அரக்கனை கொல்லமுடியும். அவரது முதுகெலும்பு மிகவும் பலமானதாக விளங்குவதற்கு காரணம் உள்ளது. முன்னொரு காலத்தில் திருப்பாற்கடல் கடைவதற்கு முன்பாக, தேவர்கள் அனைவரும் தத்தமது ஆயுதங்களை இந்த முனிவரிடம் ஒப்படைத்து, பத்திரமாக வைத்திருக்க வேண்டினார்கள். இவர் அனைத்து ஆயுதங்களையும் தன் வாயில் போட்டு பத்திரப்படுத்திவிட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். இவரது தவத்தின் சக்தியால் அனைத்து ஆயுதங்களும் உருகி அவரது முதுகெலும்பில் சேர்ந்துவிட்டன. இதனால் அவரது முதுகெலும்பு மிகவும் பலமுள்ளதாகிவிட்டது” என்றார்.