Tag Archives: முழையூர்
பரசுநாதசுவாமி திருக்கோயில், முழையூர்
அருள்மிகு பரசுநாதசுவாமி திருக்கோயில், முழையூர், தஞ்சாவூர் மாவட்டம்.
+91 4374 267 237
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பரசுநாதர் | |
அம்மன் | – | ஞானாம்பிகை | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | முழையூர் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தந்தையின் உத்தரவுப்படி தனது தாயை வெட்டிய பரசுராமர், பிரம்மகத்தி தோஷம் நீங்குவதற்காக சிவபூஜை செய்தார். அவர் முழையூர் திருத்தலத்திற்கு வந்ததார். ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்தார். அவருடைய தோஷம் நீங்கியது. இதன் காரணமாக சுவாமிக்கு “பரசுநாதர்” என்ற பெயர் ஏற்பட்டது. இந்த தலத்தில் அம்பாள் ஞானாம்பிகையுடன், பரசுநாதர் கோயில் கொண்டுள்ளார். இங்கே ஒரு காலத்தில், மகாமகம் போல மிகப்பெரிய அளவில் திரிதியை விழா நடந்திருக்கிறது. வட மாநில பக்தர்களும் வந்தார்கள். அப்போது தங்கக்காசுகளால் சுவாமிக்கு காப்பிடப்படும். பிறகு இது படிப்படியாக குறைந்து விட்டது. சமீப காலமாக இந்தத்தலம் மீண்டும் புகழ் பெற்று வருகிறது.