Tag Archives: கண்ணங்குடி

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கண்ணங்குடி

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கண்ணங்குடி, கீரப்பாளையம் வழி, எண்ணாநகரம் போஸ்ட், சிதம்பரம் தாலுகா, கடலூர் மாவட்டம்.

+91 99444 62171, 93603 87690 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வரதராஜப்பெருமாள்

உற்சவர்

வரதர்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

தீர்த்தம்

பெருமாள் குளம்

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கண்ணங்குடி

மாவட்டம்

கடலூர்

மாநிலம்

தமிழ்நாடு

இவ்வூரில் வசித்த பெருமாள் பக்தர் ஒருவருக்கு ஊரில் பெருமாளுக்கு கோயில் இல்லை என்ற மனக்குறை இருந்தது. அவருக்கு இங்கு கோயில் கட்ட, அருளும்படி சுவாமியிடம் வேண்டிக்கொண்டார். ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், அருகிலுள்ள ஒரு குளத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கு தனது சிலை வடிவம் இருப்பதை உணர்த்தினார். அதன்படி, ஏரிக்கு சென்ற பக்தர் சிலை இருந்ததைக் கண்டார். அச்சிலையை இங்கே பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். சுவாமிக்கு வரதராஜப்பெருமாள் என்ற பெயர் சூட்டப்பட்டது.

ஏகதள விமானத்தின் கீழ், வரதராஜப்பெருமாள் நின்ற கோலத்தில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சுவாமி சன்னதி முன் அர்த்தமண்டபத்தில் வானர ஆஞ்சநேயர் இருக்கிறார். இவர் தலையில் கிரீடம் இல்லாமல், இராமபிரானுக்கு உதவி செய்தபோது இருந்த அமைப்பில், வானரம் போலவே இருக்கிறார். கூப்பிய இரு கைகளுக்கு நடுவே ஜபமாலை வைத்திருக்கிறார். சுவாமி எதிரேயுள்ள மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். இங்கு பெருமாளின் தசாவதார ஓவியங்களும், நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களும் தொகுப்பாக எழுதப்பட்டுள்ளது.