Tag Archives: ஆறகழூர்
அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில், ஆறகழூர்
அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில், ஆறகழூர், சேலம் மாவட்டம்.
+91- 4282-260248, +91-99946 31830
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5 மணி முதல் 7.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
கரிவரதராஜப்பெருமாள் |
தாயார் |
– |
|
கமலவல்லி |
தல விருட்சம் |
– |
|
வில்வம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
ஆறகழூர் |
மாவட்டம் |
– |
|
சேலம் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
பல்லாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியை ராஜராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சிக்காலத்தில் மக்கள் செல்வச் செழிப்புடன் இருந்தனர். எனவே, அவர்கள் இறைவழிபாட்டை முற்றிலும் மறந்தனர். அவர்களுக்கு இறைவழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக திருமால், வருணனிடம் சொல்லி மழை பெய்யாமல் செய்தார். இதனால், பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் வறுமையில் வாடினர். துன்பம் வந்ததும் கடவுளின் நினைவு வந்தது. பெருமாளிடம் தங்கள் பக்தியின்மைக்காக மன்னிப்பு கோரினர். அன்றிரவில் மன்னனின் கனவில் திருமால் தோன்றி, “உங்களுக்கு செல்வம் தருவதும், அதை நிறுத்துவதும் எமது கையில்தான் உள்ளது. நிலையற்ற செல்வத்தின் பின்னால் சென்று இறைவழிபாட்டை மறக்காதீர்கள்” என்றார். உண்மையை உணர்ந்த மன்னன் மன்னிப்பு கேட்டான். பின், திருமால் நாட்டில் கரிய மேகங்கள் உருவாகச் செய்து மழைபொழிவித்தார். மகிழ்ந்த மன்னன் இவ்விடத்தில் பெருமாளுக்கு கோயில் கட்டினான். கரிய மேகங்களை உருவாக்கி அருள்புரிந்தவர் என்பதால் சுவாமி “கரிவரதராஜப் பெருமாள்” என பெயர் பெற்றார்.
கருறையில் கரிவரதராஜர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் மேற்கு பார்த்தபடி இருக்கிறார். மழை வேண்டுபவர்கள் இவருக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். தாயார் கமலவல்லி, சுவாமி சன்னதிக்கு எதிரே கிழக்கு பார்த்தபடி, தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளது சன்னதியின் முன்புறம் நாகதேவி இருக்கிறாள்.
காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில், ஆறகழூர்
அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில், ஆறகழூர், சேலம் மாவட்டம்.
+91- 94430 24649
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | காயநிர்மாலேஸ்வரர் , காமநாதீஸ்வரர் | |
அம்மன் | – | பெரியநாயகி | |
தல விருட்சம் | – | மகிழம் | |
தீர்த்தம் | – | அக்னி தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | அகழியூர் | |
ஊர் | – | ஆறகழூர் | |
மாவட்டம் | – | சேலம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் பிரதிஷ்டை செய்த இலிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த இலிங்கம் மண்ணில் புதைந்தது.